செய்தி

இலங்கைக்கான விமான சேவைகள் தொடர்பில் கட்டார் ஏர்வேஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கான விமான சேவையை 6ஆக அதிகரிப்பதாக கட்டார் ஏர்வேஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

கொழும்பை நோக்கிப் பயணிக்கும் தனது விமான சேவைகளை 5 இலிருந்து 6ஆக அதிகரிப்பதாக கட்டார் ஏர்வேஸ் விமான சேவை அறிவித்துள்ளது.

அதிகரிக்கப்படும் 6ஆவது விமான சேவையானது எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது.

30 வணிக வகுப்பு இருக்கைகள் மற்றும் 281 சாதாரண வகுப்பு இருக்கைகள் கொண்ட போயிங் 787 வகை விமானத்தை கொழும்புக்கான சேவைகளுக்கு கட்டார் ஏர்வேஸ் பயன்படுத்துகிறது.

இந்த விமான சேவை உலகெங்கிலும் உள்ள 170 நாடுகளுக்கு பயணிகளை இணைக்கும் வகையில், கட்டார் ஏர்வேஸ் மொத்தம் 42 வாராந்திர விமானங்களை கொழும்புக்கு இயக்கும்.

கொழும்புக்கும் கொழும்பிலிருந்தும் கட்டார் ஊடான தொடர்புகளை அதிகரிப்பதற்காக இந்த மேலதிக சேவையை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என கட்டார் ஏர்வேஸ் சேவையின் இலங்கை மற்றும் மாலைதீவவிற்கான முகாமையாளர் ஜொனாதன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விமான சேவை அதிகரிப்பானது பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

See also  மகளிர் T20 உலகக் கோப்பை - முதல் வெற்றியை பதிவு செய்த வங்கதேசம்

புதிய விமான சேவைகள் உலகின் சிறந்த விமான நிலையமான கட்டாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் ஊடாக மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்வதற்கான வசதிகளை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

விமான சேவை நேர அட்டவணை: (உள்ளூர் நேரம்)

Sri Lanka (CMB) – Doha (DOH): (daily flights)

QR 663 CMB – DOH Departure at 03:35, Arrival at 06:05

QR 659 CMB – DOH Departure at 04:55, Arrival at 07:25

QR 665 CMB – DOH Departure at 10:30, Arrival at 13:00

QR 661 CMB – DOH Departure at 12:00, Arrival at 14:30

QR 655 CMB – DOH Departure at 20:20, Arrival at 22:50

QR 657 CMB – DOH Departure at 21:15, Arrival at 23:45 (Beginning 10 July 2024)

See also  வருடாந்தம் 5000 சிறார்கள் வன்முறைகளால் பாதிப்பு

Doha (DOH) – Sri Lanka (CMB): (daily flights)

QR 664 DOH – CMB Departure at 01:25, Arrival at 09:00

QR 660 DOH – CMB Departure at 02:55, Arrival at 10:30

QR 654 DOH – CMB Departure at 08:45, Arrival at 16:20

QR 662 DOH – CMB Departure at 18:30, Arrival at 02:05+1

QR 658 DOH – CMB Departure at 19:50, Arrival at 03:25+1

QR 656 DOH – CMB Departure at 07:20 Arrival at 14:55 (Beginning 10 July 2024)

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content