சஜித்மீது சரமாரியாக விமர்சனக்கணைகள் தொடுக்கும் ரணிலின் சகா: சங்கமம் தடைபடுமா?
“ இருப்பதற்கு பிடிக்கவில்லை என்பதால்தான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறினேன். எனவே, மீண்டும் அங்கு செல்வதற்குரிய திட்டம் எனக்கு இல்லை.”
இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும Ajith Manapperuma தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி UNP ஊடாக அரசியல் பயணத்தை ஆரம்பித்த அஜித் மானப்பெரும, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் SJP இணைந்தார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலிலேயே அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். எனினும், கடைசி நேரத்தில் தேர்தலில் இருந்து ஒதுங்கினார். பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe மற்றும் சஜித் பிரேமதாச Sajith Premadasa ஆகியோரின் ஒன்றிணைவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அஜித் மானப்பெரும மேலும் கூறியவை வருமாறு,
“ரணில் விக்கிரமசிங்கவுடன் சஜித் பிரேமதாச இணைந்து செயல்படுவார் என நான் நம்பவில்லை. ஏனெனில் குழு வேலை (டீம் வேர்க்) என்றால் என்னவென்பது சஜித்துக்கு தெரியாது.
அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுக்குகூட அவர் தனித்து வந்தார்.
ஜனாதிபதி தேர்தலின்போது இணைந்து செயல்பட வேண்டும் என சஜித்திடம் கூறினேன். இதனால்தான் என்னை அமைப்பாளர் பதவியில் இருந்து தூக்கினார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்தால்கூட குழு வேலைக்கு team work சஜித் இடமளிப்பார் என நான் கருதவில்லை.” – என்றார்.





