இலங்கை செய்தி

” கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கட்டளைத் தளபதி”

  • February 20, 2026
  • 0 Comments

இலங்கைக்குபயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler) இன்று கொழும்பு துறைமுகத்துக்கு சென்றிருந்தார். கடல்சார் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு வருமாறு, ” அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான பாதுகாப்பு உறவானது பாதுகாப்பை மட்டுமன்றி வேறு பல விடயங்களையும் பலப்படுத்துகிறது. அது எமது இரு நாடுகளதும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. கடல்சார் […]

இலங்கை

சாலையோரம் காத்திருந்த பெண்மீது பேருந்து மோதி விபத்து!

  • February 20, 2026
  • 0 Comments

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் யட்டியந்தோட்டை, தங்கொலவத்த பகுதியில் இன்று (20) பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்றிருந்த பெண் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 40 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்துள்ளதுடன், அவருடைய மகள் மற்றும் மகன் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பேருந்தில் பயணித்த இரண்டு இந்தியர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து யட்டியந்தோட்டை […]

உலகம் செய்தி

ரமழான் தொழுகை – கடுமையான நுழைவு கட்டுப்பாடுகள் : 10,000 பலஸ்தீனியர்களுக்கு நுழைவு தடை

  • February 20, 2026
  • 0 Comments

ரமழானின் முதல் வெள்ளிக்கிழமை, ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குப் பலஸ்தீனியர்கள் நுழைவதை இஸ்ரேல் கடுமையாகத் தடைசெய்துள்ளது. ரமல்லாவிற்கு அருகிலுள்ள கலந்தியா சோதனைச் சாவடி முன் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நின்று, உள்ளே செல்ல காத்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனாலும் மேற்குக் கரையிலிருந்து 10,000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களை அனுமதிக்க மாட்டோம் என்றும், அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வளாகத்தில் செல்லமுடியும் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள்,  தெரிவித்தனர். அனுமதிக்கபட்டவர்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 55 […]

செய்தி

பாரியளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி -போலி முகமைகள் முற்றுகை

  • February 20, 2026
  • 0 Comments

நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிதி மோசடி முறைப்பாடுகளைத் தொடர்ந்து, “விசா ஆலோசனை சேவைகள்” என்ற பெயரில் இயங்கும் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள் மீது அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட புலனாய்வுப் பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை போலியாக வழங்கி பணம் வசூலித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிறுவனங்களை இலக்குவைத்து சோதனைகளை விரிவுபடுத்தியுள்ளது. ஜா-எல மற்றும் கடான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ருமேனியாவில் லொறி ஓட்டுநர் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி […]

உலகம்

இராணுவ சட்டம் அமுற்படுத்தப்பட்ட விடயம் – மன்னிப்பு கோரினார் யூன் சுக் இயோல்!

  • February 20, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) குறுகிய கால இராணுவச் சட்ட அறிவிப்பிற்காக இன்று மன்னிப்பு கோரியுள்ளார். சியோல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், தனது இராணுவச் சட்ட ஆணையால் ஏற்பட்ட கஷ்டம் மற்றும் விரக்திக்கு மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது எனக் கூறிய […]

இலங்கை செய்தி

யாழ் விமான நிலைய பயணிகள் முனையத்தின் நிலை ஆய்வு – அமைச்சர் அனுர கருணாதிலக்க கண்காணிப்பு விஜயம்

  • February 20, 2026
  • 0 Comments

நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ் விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டிடத்தின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்காக துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். இதன்போது அவர் விமான நிலையத்தின் செயற்பாடடு பணிகளையும் ஆராய்ந்துள்ளார். 800 சதுர மீற்றருக்கும் அதிகமான புதிய பயணிகள் வருகை முனையத்தின் நிர்மாணப் பணிகளை ஆராய்ந்த அவர் குறித்த பணிகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனையும் வழங்கியுள்ளார். குறித்த விமான நிலையத்தின் ஊடாக கடந்த ஆண்டு 53,443 […]

உலகம்

ஜப்பான் அரசாங்கத்திற்கு 21 கிலோ தங்கக் கட்டிகளை பரிசளித்த நபர்!

  • February 20, 2026
  • 0 Comments

ஜப்பானில் உள்ள ஒசாகாவின் நகராட்சி நீர்வழிப் பணியகத்திற்கு £2.7 மில்லியன் மதிப்புள்ள 21 கிலோ தங்கக் கட்டிகளை பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த நன்கொடை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் முழுவதும் பல நகரங்களைப் பாதிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கவலையான கழிவுநீர் பராமரிப்பை சிறந்த முறையில் மேற்கொள்ள இந்த பணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒசாகாவில், கடந்த 2024 நிதியாண்டில் சுமார் 90 நீர் குழாய் […]

ஐரோப்பா செய்தி

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது: வின்ட்சரில் பதற்றம் – ரோயல் லொட்ஜை சூழ்ந்த பொலிஸார்

  • February 20, 2026
  • 0 Comments

வின்ட்சரில் உள்ள ரோயல் லொட்ஜ் வளாகத்தில் தொடர்ந்து பொலிஸ்  சோதனைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத பல பொலிஸ் வாகனங்கள் அங்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது அலுவலகத்தில் தவறான நடத்தை குறித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணி நேர விசாரணைக்கு பிறகு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர்  அவர் சாண்ட்ரிங்ஹாம் தோட்ட வளாகத்திற்குத் திரும்பியதாக கூறப்படுகிறது. […]

இலங்கை செய்தி

சட்டத்தரணி கொலை – சந்தேக நபரை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

  • February 20, 2026
  • 0 Comments

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொடை பகுதியில் கடந்த 13ம் திகதி சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சமப்வம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்ய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த புகைப்படத்திலுள்ள சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரின் விபரங்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபரின் புகைப்பட விபரங்கள் உயரம் – சுமார் 05 அடி 05 அங்குலம். வயது – சுமார் 44 வயது. உடல் நிறம் – கருப்பு, […]

இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

  • February 20, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் ஆகியோரை எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இன்று (20) வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் […]

error: Content is protected !!