யாழ்ப்பாணத்தில் ஆடுகளை இடமாற்ற முற்பட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
மழையில் நனைந்த ஆட்டுக்குட்டிகளை இடமாற்ற முற்பட்ட வேளை மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் கண்ணதாசன் ராகுலன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். மாணவனின் வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடு நேற்றைய தினம் சனிக்கிழமை குட்டி ஈன்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இரவு முழுவதும் யாழில் கடும் மழை பெய்தமையால் , ஆட்டு குட்டிகள் குளிரினால் கத்திய வண்ணமே இருந்துள்ளன. அதனால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மாணவன் […]













