முல்லைத்தீவில் 10 வயதுச் சிறுமியை கடத்த முயற்சி; 23 வயது இளைஞன் கைது
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயற்சி மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இன்று காலை 7 மணியளவில் கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் பொத்திப்பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். வீதியால் சென்ற மக்கள் இதனை அவதானித்து சத்தமிட்ட போது […]













