செய்தி தமிழ்நாடு

விஜயின் சி.பி.ஐ. விசாரணை நிறைவு – தாமதத்திற்கு விஜய் கூறிய காரணம்

  • January 19, 2026
  • 0 Comments

கரூர் துயரம் தொடர்பான இன்றைய சி.பி.ஐ. விசாரணையில், பிரசாரத்திற்கு ஏன் தாமதமாக சென்றீர்கள் என அதிகாரிகள் த.வெ.க. தலைவர் விஜயிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். வீதி வளைவுகள் காரணமாக கரூர் செல்ல 7 மணி நேரம் தாமதம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. தாமதத்திற்கு வளைவுகள் தான் காரணம் என்பதற்கான ஆதாரத்தை விஜயிடம் சி.பி.ஐ. கேட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும் பிரசார வாகனம் தொடர்ந்து முன்னேறியது ஏன் என அடுக்கடுக்கான கேள்விகளை சி.பி.ஐ. […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் கோர விபத்து – இருவர் பலி

  • January 19, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் கிழக்கு யார்க்ஷயரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவத்தை பார்த்தவர்கள் அல்லது தொடர்புடைய கேமரா காட்சிகள் உள்ளவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு குறித்த பகுதியில் அமைந்துள்ள வீதி மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

ஆப்கானிஸ்தானில் இருந்து தஜிகிஸ்தானுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய நபர்கள் கொலை!

  • January 19, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இருந்து தஜிகிஸ்தானுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் நான்கு ஆயுதமேந்திய நபர்கள் எல்லைக் காவலர்களுடனான மோதலின் போது கொல்லப்பட்டதாக தஜிகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் (Badakhshan) மாகாணத்தை ஒட்டிய ஒரு கிராமத்திற்கு அருகில் தாஜிக் (Tajik ) எல்லைக்  காவலர்களால் இந்தக் குழு கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நபர்கள் சரணடையும்  உத்தரவுகளை மறுத்து, ஆயுதமேந்திய எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும், இதனைத் தொடர்ந்தே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நால்வரும் “பயங்கரவாத […]

அரசியல் இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்பு அவசியம்: மேர்வின் சில்வா வலியுறுத்து!

  • January 19, 2026
  • 0 Comments

இலங்கையின் கலாசாரத்துக்கே உரித்தான வகையில் கல்வி மறுசீரமைப்பு அவசியம் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். வழக்கு விசாரணையொன்றுக்காக நீதிமன்றம் வந்திருந்த மேர்வின் சில்வாவிடம், நீதிமன்ற வளாகத்தில் வைத்து கல்வி மறுசீரமைப்பு பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கல்வி மறுசீரமைப்பு அவசியம். அது எமது கலாசாரம் மற்றும் எமது நாட்டுக்கே உரிய வகையில் இடம்பெற வேண்டும். சர்வமதத் தலைவர்கள், துறைசார் நிபுணர்களுடன் இது சம்பந்தமாக கலந்துரையாட […]

அரசியல் இலங்கை செய்தி

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் பிளவா?

  • January 19, 2026
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் Democratic Tamil National Alliance முக்கிய கூட்டத்தை அதன் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. Selvam Aidakalanathan புறக்கணித்துள்ளார். ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய அரசியல் கலந்துரையாடல் நேற்றுக் காலை முதல் பிற்கல் வரை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதில் அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, சமத்துவக் கட்சி ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதன் […]

ஐரோப்பா

ட்ரம்பின் வரி விதிப்பு : ஐரோப்பிய பங்கு சந்தைகள் சரிவு, உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

  • January 19, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதித்துள்ள நிலையில், உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இதற்கமைய இன்றைய தினம்  தங்கம் 1.6 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்று $4,689 (£3,498.30) ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை  $94.08 (£70.19) என்ற சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. சில மணி நேரங்களில் குறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே ஐரோப்பா முழுவதும் பங்குச் சந்தைகள் பாரிய சரிவை சந்தித்துள்ளன. பிரான்சில், […]

இலங்கை செய்தி

கல்வி மறுசீரமைப்பை அமுலாக்க கோரி போராட்டம்

  • January 19, 2026
  • 0 Comments

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் குழுவொன்று தொடர் அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. “தரம் 06 பெற்றோர் ஒன்றியம்” என்ற பெயரில் ஒன்றிணைந்த பெற்றோர்களால் கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (19) காலை முதல் இந்த அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதே கோரிக்கையை முன்வைத்துப் பொலன்னறுவை மற்றும் காலி உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் […]

இலங்கை செய்தி

லண்டன் பொன்விழா மாநாடு – உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச பொதுச் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகை

  • January 19, 2026
  • 0 Comments

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) சர்வதேச பொதுச் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் நாளை  இலங்கைக்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வருடம் லண்டன் மாநகரில் இடம் பெறவுள்ள இயக்கத்தின் 50 ஆவது சர்வதேச மாநாடு தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படவிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து அவர் இலங்கை கிளையினருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை செல்லும் பொதுச் செயலாளர் நாயகம் இலங்கையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.உரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இந்தியா செய்தி

2026 வரவு செலவுத் திட்டம் : 17 லட்சம் வரை வருமான வரி விலக்கு

  • January 19, 2026
  • 0 Comments

இந்தியாவில் பொது வரவு செலவுத்திட்ட வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு 17 லட்சமாக ரூபா உயரும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடரில் பெப்ரவரி முதலாம் திகதி பொது வரவு செலவுத்திட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டம் மீது நடுத்தர வர்க்கத்தினர் அதிக நம்பிக்கையுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் பொது வரவு செலவுத்திட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சம்பளம் பெறுபவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டார். […]

உலகம் செய்தி

இணைய முடக்கத்தை நீக்க ஈரான் தீர்மானம்

  • January 19, 2026
  • 0 Comments

ஈரானில் கடந்த டிசம்பர் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்ட அரசுக்கு எதிரான போராட்டங்களை அடக்குவதற்காக அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கை மற்றும் இணைய முடக்கம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போராட்டங்களின் போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 500 பாதுகாப்புப் படை உறுப்பினர்களும் அடங்குவர் என்பதுடன், ஈரானின் வடமேற்கே உள்ள குர்திஷ் இனத்தவர்கள் வாழும் பகுதிகளில் மிக மோசமான மோதல்கள் […]

error: Content is protected !!