இலங்கை அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நிலை – நோயாளிகளுக்கு நெருக்கடி
இலங்கையில் சீடீ உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான இயந்திரங்கள் அரச வைத்தியசாலை கட்டமைப்பில் தொடர்ந்தும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. சில CT Scan இயந்திரங்கள் பல மாதங்களாக செயலிழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம கூறினார். இந்த இயந்திரங்கள் செயலிழந்துள்ளமையினால் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்ரகுப்தவிடம் […]













