ஐரோப்பா

பல்கேரியா நாட்டில் ஒளிப்பிழம்புடன் விழுந்த விண்கல் – அதிர்ச்சியில் மக்கள்

  • July 13, 2023
  • 0 Comments

பல்கேரிய நாட்டின் தலைநகருக்கு அருகே வானில் இருந்து ஒளிப்பிழம்புடன் விண்கல் ஒன்று விழுந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு பல்கேரிய தலைநகர் சோபியாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில், பால்கன் மலைத்தொடரை ஒட்டி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த ஒளிப்பிழம்புடன் விண்கல் விழுந்த போது, சில வினாடிகளுக்கு வானம் பிரகாசமாக காட்சியளித்தது. விண்கல் விழுந்த போது பலத்த சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் […]

ஆசியா

நிதி நெருக்கடியால் போர் விமானங்களை விற்கும் பாகிஸ்தான்!

  • July 13, 2023
  • 0 Comments

போர் விமானங்களை விற்பதன் மூலம் நிதிநெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சில ஆண்டுகளுக்கு முன்பு கொள்வனவு செய்த 1.1 பில்லியன் மதிப்புடைய போர் விமானங்களை, ஈராக்கிற்கு விற்பனை செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர சர்வதேச நாயண நிதியத்தின் உதவியை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பொலிஸ் சேவையில் விண்ணப்பித்துள்ள 15,000 வெளிநாட்டவர்கள்

  • July 13, 2023
  • 0 Comments

குயின்ஸ்லாந்து பொலிஸ் சேவையில் வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு கிட்டத்தட்ட 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆண்டுக்கு 500 வெளிமாநில தொழிலாளர்களை 05 ஆண்டுகளுக்கு வேலைக்கு அமர்த்த மாநில பொலிஸாருக்கு கடந்த பெப்ரவரி மாதம் மாநில அரசும், மத்திய அரசும் அனுமதி வழங்கியது. சிங்கப்பூர் – பிஜி – தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில பொலிஸ் துறையும் அறிவித்திருந்தது. முதல் அணி ஒக்டோபர் மாதத்திற்குள் பயிற்சியைத் தொடங்க உள்ளது. குயின்ஸ்லாந்து பொலிஸ் […]

இலங்கை

இலங்கையில் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட இரு மயக்க மருந்துகள்!

  • July 13, 2023
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சு இந்த விடயத்தை அறிவித்துள்ளது. அவற்றுக்குப் பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். புதிய மயக்க மருந்து இன்று நாட்டுக்கு வருமெனவும் அவர் கூறினார். கடந்த காலங்களில் சில வகையான மயக்க மருந்தைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்கள் சிலர், உயிரிழந்தனர். இதையடுத்து, மயக்க மருந்து […]

இலங்கை

டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதை துல்லியமாக காட்டும் காணொலி வெளியீடு!

  • July 13, 2023
  • 0 Comments

டைட்டானிக் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது. அதில் பயணித்த ஐவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் எவ்வாறு வெடித்துச் சிதறியது என்பதை விளக்கும் வகையில் காணொலி ஒன்று யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த காணொலியை 11 நாட்களில் ஐந்து மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர். புதிய அனிமேஷன், பிளெண்டர் எனப்படும் திறந்த மூல மென்பொருளைப் பயன்படுத்தி,வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காணொலி, தற்போது உள்ள தொழிநுட்பம் எவ்வாறு மேம்பட்டுள்ளது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஒரே நாளில் 2வது முறை செயலிழந்த ‘ChatGPT’..!

  • July 13, 2023
  • 0 Comments

உலக புகழ் பெற்ற ChatGPT இரண்டாவது நாளாக உலக அளவில் செயலிழந்துள்ளதைாக தெரியவந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தில், மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் Open AI நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ChatGPT, 24 மணி நேரத்திற்குள் 2 வது முறையாக உலக அளவில் செயலிழந்துள்ளது. இதனால் பயனர்கள் உரையாடல்களை சேமித்து வைக்கவோ அல்லது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. ஓபன் ஏஐ சிஸ்டம் ஆனது ChatGPT செயல்படுவதாக கூறினாலும், ட்விட்டரில் சில பயனர்கள் இந்த […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரின் மோசமான செயல் – மாயமான ஐபோன்கள்

  • July 13, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் சுமார் 25,000 க்கும் மேற்பட்ட iPhone கைப்பேசிகளை திருடிய வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லிம் ஜென் ஹீ என்ற முன்னாள் உதவி செயல்பாட்டு மேலாளருக்கு நேற்று 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் அப்போது பணிபுரிந்த “பெகாட்ரான் சர்வீஸ் சிங்கப்பூர்” நிறுவனத்துக்கு அவர் செய்த திருட்டு செயல் காரணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் இழப்பு ஏற்பட்டது. ஆகவே அந்நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி Apple நிறுவனத்திற்கு இழப்பீடு தொகையை கொடுக்க வேண்டியிருந்தது. […]

ஆசியா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா!

  • July 13, 2023
  • 0 Comments

வடகொரியா என்ற  Hwasong-18 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை  திடமான உந்துசக்திகளைப் பயன்படுத்துகிறது,  போரின் போது ஏவுகணைகளை வேகமாக நிலைநிறுத்த அனுமதிக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் குறித்த நடவடிக்கைக்கு தென்கொரியா மற்றும் ஜப்பானில் உள்ள இராணுவங்கள் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்துவதன் மூலமும், தென் கொரிய நட்பு நாடுகளுடன் அணு ஆயுதப் போர் திட்டமிடல் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வாடகை வீடுகளில் வாழ்பவர்களுக்கு அமுலாகும் சட்டம்!

  • July 13, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் வாடகை குடியிருப்பாளர்களின் நலன் கருதி சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்படவுள்ளது. ஜெர்மனியின் பாராளுமன்றமானது வாடகை குடியிருப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய வாடகை குடியிருப்பாளர்கள் சட்டம் ஒன்றை இயற்றவுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. அண்மை காலங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொ டுப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது வாடகை வடு வழங்கும் பொழுது வீட்டு சொந்த காரர்கள் வீடுகளுக்கு தளபாடங்களை போட்டு பின்னர் இந்த வீடுகளுடைய வாடகையை உயர்வாக கணிப்பதாக தெரிய வந்திருக்கின்றது. சாதாரணமாக […]

செய்தி

செயற்கை நுண்ணறிவோடு மோத தயாராகுங்கள் – சுசில் பிரேமஜயந்த!

  • July 13, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவோடு மோத தயாராகுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அழைப்பு விடுத்துள்ளார். புத்தளத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  மிகக் குறுகிய காலத்தில் அறிவு இரட்டிப்பாகும் உலகில் செயற்கை நுண்ணறிவுடன் மோத  மனித வளத்தை நன்கு மேலாண்மை செய்து உகந்த சேவையைப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில்  ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் தவிர்க்கப்படும் எனவும், அதை வலுப்படுத்துவதால் […]

error: Content is protected !!