இலங்கையில் யுவதி மரணம் – அதிரடியாக களமிறங்கிய குழுவினர்
பேராதனை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற 21 வயதான யுவதியின் சந்தேகத்திற்கிடமான மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழு இன்றைய தினம் பேராதனை வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். எவ்வாறாயினும், யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசி, மரணத்தை ஏற்படுத்தவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த விடயத்தை விஞ்ஞானபூர்வமாக சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க குறித்த விசாரணைக்குழுவிற்கு […]













