இலங்கை

கர்பிணி பெண்களுக்கு போஷாக்கு கிடைப்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தல்!

  • July 15, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கும் போதிய போஷாக்கு கிடைப்பதை உறுதி செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை,  இலங்கையை வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தாய்வழி ஊட்டசத்தை கடுமையாக பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, அரங்கத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்கள் மீது  கவனம் செலுத்தி, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு ஊட்டச்சத்தை அணுகுவதில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் […]

ஐரோப்பா

உதவிக்கா கதறும் பெண்ணின் சத்தம்; விசாரிக்க சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த ஆச்சர்யம்!

  • July 15, 2023
  • 0 Comments

பிரிட்டனின் கேன்வி தீவைச் (Canvey Island) சேர்ந்த நபர் ஒருவர் அவரது குடியிருப்பு வட்டாரத்தில் பெண் ஒருவர் கதறி அழுதுகொண்டிருந்ததைக் கேட்டுக் காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்தார். அந்த தகவலை அடுத்து காவல்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குச் சென்றடைந்த பின்னரே கதறி அழுதது பெண் அல்ல என்றும் அது கிளி என்றும் அவர்களுக்குத் தெரிய வந்தது. அதேவேளை கதறி அழுத கிளிக்குச் சொந்தக்காரரான ஸ்டீவ் வூட் (Steve Wood) சுமார் 21 ஆண்டுகளாகப் […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் பேரழிவு நிலையை எட்டிய வெப்பநிலை!

  • July 15, 2023
  • 0 Comments

ஐரோப்பா தற்போது செர்பரஸ் என்ற பேரழிவு தரும் வெப்ப அலையின் பிடியில் சிக்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடுமையான வெப்பநிலையை கட்டவிழ்த்து விடுகிறது.  இந்த தீவிர வானிலை நிகழ்வு சுகாதார விழிப்பூட்டல்களைத் தூண்டியுள்ளது. செர்பரஸ் வெப்ப அலையானது வெப்பநிலையை முன்னோடியில்லாத அளவிற்கு உயர்த்தியுள்ளது, இது ஐரோப்பா முழுவதும் தனிநபர்களுக்கு கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கை

ஊசியால் இளம் பெண் மரணம்; ஐவரடங்கிய குழு இன்று விஜயம்

  • July 15, 2023
  • 0 Comments

பேராதனை வைத்தியசாலையில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான ஐவரடங்கிய குழு இன்று (15) வைத்தியசாலைக்கு விஜயம் செய்து விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. சில தினங்களில் சம்பந்தப்பட்ட குழு விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். கண்டி பொத்துபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சாமோதி சந்தீபனி ஜயரத்ன என்பவர் வயிற்றில் ஏற்பட்ட கோளாறு […]

இலங்கை

இரண்டுவருடங்களாக விசா இன்றி இலங்கையில் தங்கியருந்த இந்திய பிரஜை கைது!

  • July 15, 2023
  • 0 Comments

சட்டவிரோதமாக  கடந்த 02 ஆண்டுகளாக இலங்கையில் தந்தியிருந்த  இந்திய பிரஜை ஒருவர் இன்று (15.07) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த குறித்த நபர் நண்பர் ஒருவருடன் மட்டகளப்பில் தங்கியிருந்துள்ளார். நண்பர்கள் இருவரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நிலையில். மட்டகளப்பு பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதன்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பன் செல்வதுரை என்ற நபர் இலங்கை வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

ஐரோப்பா

மல்லோர்கா தீவில் 6 ஜேர்மனியர்களால் 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி!

  • July 15, 2023
  • 0 Comments

ஸ்பெயின் மல்லோர்கா தீவில் 18 வயது இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக 6 ஜேர்மனியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மல்லோர்கா தீவில் பிரபலமான சுற்றுலாத் தலமான பிளாயா டி பால்மாவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் 18 வயது ஜேர்மன் பெண்ணொருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனி சுற்றுலாப் பயணிகள் 6 பேர் அப்பெண்ணை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20, 21 வயதுடைய இளைஞர்களும் அடங்குவர் என தெரிய வந்துள்ளது. […]

இலங்கை

கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

  • July 15, 2023
  • 0 Comments

கொழும்பு கோட்டைக்கும் – காங்கேசன் துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (15.07) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட தண்டவாளத்தில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவும் கலந்து கொண்டார். அதன்படி இன்று காலை 5.45 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதப் பயணம் […]

இலங்கை

அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடையை நீக்க தீர்மானம்!

  • July 15, 2023
  • 0 Comments

அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடையை செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து நிதியமைச்சு இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை வாரந்தோறும் மீளாய்வு செய்யவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை 286 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதுடன்,  வாகனங்கள் உட்பட 930 இதர வாகனப் பொருட்கள் மீதான இறக்குமதி தடை அமலில் உள்ளது. ஆனால் செப்டம்பர் முதல் வாரத்திற்குள் எஞ்சியுள்ள […]

இலங்கை

விமான நிலையங்களின் சில சேவைகளில் தனியாரை ஈடுபடுத்த திட்டம்!

  • July 15, 2023
  • 0 Comments

விமான நிலையங்களில் தரையை  கையாளுதல், கேட்டரிங் மற்றும் விமான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் தனியார் துறையை ஈடுபடுத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்த சேவைகள் தற்போது அரச ஏகபோகமாக உள்ளது. இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் மேற்கூறிய சேவைகளை வழங்குவதற்கு தனியார் தரப்பினரை அழைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது” எனக் கூறினார். இந்த வார தொடக்கத்தில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் […]

ஆசியா

தென் கொரியாவில் சீரற்ற காலநிலையில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு!

  • July 15, 2023
  • 0 Comments

தென் கொரியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவில் ஜுலை 09 முதல் கனமழை பெய்து வருகிறது.  இது கடந்த மூன்று நாட்களாக தீவிரமடைந்துள்ளது. வடக்கு சுங்சியோங் மாகாணத்தில் உள்ள அணை ஒன்று இன்று (15) காலை நிரம்பி வழிந்ததையடுத்து, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோசன் அணைக்கு 2,700 டன்னுக்கும் அதிகமான நீர் பாய்ந்தது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை […]

error: Content is protected !!