யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே மோதல்
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் காயமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே இன்றையதினம் வன்முறை உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிரதேச செயலருக்கு அறிவிக்கப்பட்ட […]













