ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி

  • August 17, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது “நல்ல விஷயம்” என்று பிரிட்டனின் உயர்மட்ட மக்கள்தொகை நிபுணர் தெரிவித்துள்ளார், பிறப்புகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் மிகக் குறைவாக இருப்பதாக புதிய தரவுகள் காட்டுகின்றன. பேராசிரியை சாரா ஹார்பர் CBE, ஆக்ஸ்போர்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் பாப்புலேஷன் ஏஜிங் நிறுவனர் மற்றும் இயக்குநரும், முன்னாள் அரசாங்க ஆலோசகரும், மேற்கில் பிறப்பு விகிதம் குறைவது “நமது கிரகத்திற்கு நல்லது” என்றார். தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (ONS) உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் இங்கிலாந்து மற்றும் […]

இலங்கை செய்தி

ஹோமாமை பகுதியில் பாரிய தீவிபத்து!!! பொது மக்களுக்கு அவசர அறிவிப்பு

  • August 17, 2023
  • 0 Comments

ஹோமாகமையை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளரினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம பகுதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாச பிரச்சனைகளை குறைப்பதற்காகவே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழிற்பேட்டையில் உள்ள இரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட தீ தொடர்ந்தும் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டை […]

இலங்கை செய்தி

சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற 7 இலங்கையர்களை ஜோர்டானில் கைது

  • August 17, 2023
  • 0 Comments

ஏழு இலங்கையர்கள் இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் முயற்சியை ஜோர்டான் முறியடித்துள்ளதாக ஜோர்டான் இராணுவம் தனது இணையத்தளத்தில் அறிவித்துள்ளது. புதன்கிழமை காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஏழு பேரும் எல்லைப் படைகளால் கைது செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று இராணுவம் அதன் பொது கட்டளையின் ஆதாரத்தை மேற்கோளிட்டுள்ளது. எல்லைகள் மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க ஆயுதப் படைகள் ஊடுருவல் அல்லது கடத்தல் முயற்சிகளை உறுதியாகக் கையாளும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜோர்டான்-இஸ்ரேல் எல்லை கடந்த ஆண்டுகளில் […]

இலங்கை செய்தி

அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவுக்கு வருகை

  • August 17, 2023
  • 0 Comments

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அமெரிக்காவின் சைபர்ஸ்பேஸ் மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர் நதானியேல் சி.ஃபிக் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அவர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ளது. அவர் இலங்கைக்கான விஜயத்தின் போது, ​​அரசாங்க மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளுடன் இணைய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 23 வரை […]

இலங்கை செய்தி

கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து வெற்றிபெற்ற தாய்மார்கள்

  • August 17, 2023
  • 0 Comments

நான்கு பேரப்பிள்ளைகள், ஆறு பிள்ளைகள் 56 வயதான பெண்மணி ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து மூன்றாமிடத்தை தனதாக்கிக் கொண்டார்! நான்கு பிள்ளைகள், 40 வயது பெண்மணி முதலாமிடத்தையும், மூன்று பிள்ளைகள் இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்ட 44வயது பெண்மணி இரண்டாமிடத்தையும் கடலில் நீந்தி பெரும் பரப்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது. இதில் பெண்களுக்கான ஒரு […]

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது

  • August 17, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. புனித குர்ஆனை சேதப்படுத்திய வழக்கை அடிப்படையாகக் கொண்டு வனமுறை தீவிரமாகியுள்ளது. குரான் நகலை சேதப்படுத்தியதாகவும், அதை அவமதித்ததாகவும் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டதால் இந்த வன்முறைச் செயல்கள் நடந்துள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் வன்முறைகள் நடந்துள்ளன. 04 கிறிஸ்தவ தேவாலயங்களை நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடியிருப்பாளர்கள் தாக்கி தீ வைத்து எரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், பல கிறிஸ்தவ பக்தர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், வன்முறைச் செயல்களால் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

நிலவின் தென் துருவத்தை அடையப்போவது யார்?? இந்தியா, ரஷ்யா இடையே கடும் போட்டி

  • August 17, 2023
  • 0 Comments

நிலவின் தென் துருவத்தை பார்வையிடும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை பெற இந்தியா மற்றும் ரஷ்யா இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது. ரஷ்யாவுக்கு முன்னதாக தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான தனது விண்வெளிப் பயணத்தை இந்தியா தொடங்கியது. இவர்களின் பணி ஆகஸ்ட் 23ம் திகதி நிறைவடையும். ஆனால் அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக, கடந்த வாரம் ரஷ்யாவால் ஏவப்பட்ட செயற்கைகோள் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் சந்திரயான் 3 விண்வெளிப் பயணம் தற்போது […]

இலங்கை செய்தி

பாராளுமன்றத்தில் கிடைத்த தலையணைகள் மற்றும் மெத்தை பற்றி விளக்கம்

  • August 17, 2023
  • 0 Comments

நாடாளுமன்றக் குழு அறையில் இரண்டு தலையணைகள் மற்றும் மெத்தை ஒன்று காணப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 30ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்கு மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட […]

இலங்கை செய்தி

மன்னாரில் ஹெரோயின் போதை பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபல் கைது

  • August 17, 2023
  • 0 Comments

மன்னாரைச் சேர்ந்த ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தபல் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை(16) மாலை மன்னாரில் வைத்து பொலிஸ் புலனாய்வு துறை யினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் மூர்வீதி புதிய தெரு பகுதியை சேர்ந்த லோரன்ஸ் போல் கிளிண்டன் மார்க் (வயது-28) என்ற ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தபல் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. -குறித்த நபர் நேற்றைய தினம் புதன்கிழமை(16) மாலை […]

இலங்கை செய்தி

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் மரணம்

  • August 17, 2023
  • 0 Comments

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில், வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதி சிறுகாயங்களிற்குள்ளாகினார். விபத்து தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

error: Content is protected !!