அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவில் விழுந்து நொறுங்கிய லூனா-25! குழப்பத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள்

ஏறக்குறைய 50 ஆண்டுகளில் ரஷ்யாவின் முதல் நிலவு பயணமான லூனா -25 ஆய்வு, தரையிறங்குவதற்கு முந்தைய சூழ்ச்சியின் போது நிலவில் விழுந்ததாக ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லூனா-25 உடனான தொடர்பு சனிக்கிழமை மதியம் 2:57 மணிக்கு (1157 GMT) துண்டிக்கப்பட்டது என ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பூர்வாங்க கண்டுபிடிப்புகளின்படி, “நிலவின் மேற்பரப்பில் மோதியதைத் தொடர்ந்து லேண்டர் இல்லாமல் போய்விட்டது” என்று தெரிவிக்கப்படுகின்றது. “நேற்றும் (19)இன்று (20 ) லூனா-25 […]

உலகம்

ஈக்வடோரில் மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிபிரயோகம்!

  • August 20, 2023
  • 0 Comments

ஈக்வடாரில் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த துப்பாக்கி பிரயோகத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஈக்வடார் நாட்டின் முன்னாள் துணை அதிபரும் ஓட்டோ சோனென்ஹோல்ஸ்னர் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதே  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து துரித விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஈக்வடார் ஜனாதிபதி வேட்பாளர் […]

இலங்கை

மதுரை – கொழும்பு விமான சேவை ஆரம்பம்!

இந்தியாவின் பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட் இன்று (ஆகஸ்ட் 20) முதல் இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவையைத் தொடங்குகிறது. முன்னதாக ஜூலை மாதம், ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரப்பூர்வ ஆன்லைன் முன்பதிவு முறையில், ஆகஸ்ட் 20, 2023 முதல் வாரந்தோறும் ஆறு முறை மதுரை – கொழும்பு விமான சேவையை மீண்டும் தொடங்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது. அதன்படி, பட்ஜெட் கேரியர் இந்தியாவின் மதுரை மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) இடையே […]

இலங்கை

திருகோணமலையில் கடல்பயணங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

  • August 20, 2023
  • 0 Comments

திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவை பார்வையிடும் கடல் பயணங்களை மீள ஆரம்பிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, திருகோணமலை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவுக்குச் செல்வதற்கான  முன்னோடித் திட்டம் நேற்று (19.08) ஆரம்பமாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. திருகோணமலை இயற்கை துறைமுகம் மற்றும் நிலாவெளி புறா தீவின் பவளப்பாறைகளை பார்வையிடுவதற்கு தேவையான கடற்பயண வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த முன்னோடி திட்டமானது பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் வழங்கும் எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இந்தியா

வெங்காய ஏற்றுமதிக்கு 40 வீதம் வரி விதிக்க தீர்மானம்!

  • August 20, 2023
  • 0 Comments

வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதிக்க இந்தியா தீர்மானித்துள்ளது. ஜூலை முதல் ஆகஸ்ட் வரை முக்கிய சந்தைகளில் சராசரி மொத்த வெங்காய விலை சுமார் 20% உயர்ந்துள்ளதால், டிசம்பர் 31 வரை வரி விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஏற்றுமதிகள் வங்கதேசம், நேபாளம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளை பாதிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

மீண்டும் போலீஸ் கேரக்டர்! சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்..!

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’காக்கிச்சட்டை’ என்ற திரைப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் […]

இந்தியா

மும்பையில் ரூ.15 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!

எத்தியோப்பியாவில் இருந்து மும்பைக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள கோகோயின் போதைப்பொருளை டஃபிள் பையில் மறைத்து கடத்தியதாக ஒருவரை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) கைது செய்துள்ளது. அடிஸ் அபாபாவிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். வழக்கமான அந்த சோதனையின் போது ஒரு இந்திய பயணியின் பையில் இருந்து 1496 கிராம் எடையுள்ள வெள்ளைப் பொடியை கண்டெடுத்தனர். பரிசோதனையில் இது கொக்கைன் போதைப்பொருள் என தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பயணியையும், அவரிடமிருந்து […]

பொழுதுபோக்கு

நீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் கவின்! (புகைப்படங்கள் உள்ளே)

  • August 20, 2023
  • 0 Comments

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி பின் பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்தான் நடிகர் கவின். தற்போது வெள்ளித்திரைகளில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கவின் தனது நீண்டநாள் காதலியான மோனிக்காவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவருடைய திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இலங்கை

இலங்கை சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • August 20, 2023
  • 0 Comments

சுங்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் விபரங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுங்க லெட்டர் ஹெட்கள், தொலைபேசி இலக்கங்கள் மாத்திரமன்றி சுங்க அதிகாரிகளின் பெயர்களையும் மோசடி செய்பவர்கள் பயன்படுத்தி வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார். இனந்தெரியாத நபர்களின் கணக்குகளில் ஒருபோதும் பணத்தை வைப்பிலிடுவதில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான மோசடிச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் நபர்கள் குறித்து […]

இலங்கை

தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் பலி!

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதிக்கு அருகில் தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் நேற்று (19) உயிரிழந்துள்ளார். கோட்டையிலிருந்து பேட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீது மோதியதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பெண் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்ய கோட்டை பொலிஸார் […]

error: Content is protected !!