பொழுதுபோக்கு

மலை உச்சியில் நாளை இணையும் இரு இதயங்கள்!

  • February 25, 2026
  • 0 Comments

நடிகர் விஜய்தேவரகொண்டா Vijay Deverakonda , நடிகை ராஷ்மிகா Rashmika ஆகிய ஜோடியின் காதல் திருமணம் நாளை நடைபெறுகின்றது. நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டும் திருமண நிகழ்வில் பங்கேற்கவுள்ளனராம். திருமண விழா உதய்ப்பூர் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலை உச்சியில் அமைந்துள்ள ஐ.டி.சி. மெமென்டோஸ் ரிசார்ட்டில் இடம்பெறவுள்ளதாம். மலைப் பகுதியில் விரிவான தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள இந்த ஆடம்பர ரிசார்ட் தனியுரிமைக்கு பெயர் பெற்ற இடமாகும். திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா, […]

இலங்கை செய்தி

விஜித ஹேரத் நாளை ஜேர்மன் பயணம்!

  • February 25, 2026
  • 0 Comments

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath இரு நாள்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு நாளை (26) ஜேர்மன் செல்கின்றார். ஜேர்மன், ஆசிய பசிபிக் வணிக சங்கம் மற்றும் பிரெமன் அத்தியாயத்தால் வழங்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே இவ்விஜயம் இடம்பெறுகின்றது. இதன்போத வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் கூட்டங்களில் அவர் பங்கேற்கவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் பிரெமன் அத்தியாயத்தின் 125 ஆவது ஆண்டு விழா […]

உலகம்

உலக நாடுகள் மீதான வரி விதிப்பை நியாயப்படுத்தும் ட்ரம்ப்!

  • February 25, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப்  நாட்டு மக்களுக்காக ஆற்றிய உரையில் தனது வரி விதிப்பு கொள்கைகளை நியாயப்படுத்தி பேசியுள்ளார். தனது நாட்டு மக்கள் செலுத்தும் வருமான வரிகளை எளிதாக்கும் நோக்கில் இந்த வரிகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும், இது மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும்  அவர் கூறியுள்ளார். 1 மணி நேரம் 48 நிமிடங்கள் மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி, “ஒரு சகாப்தத்திற்கு ஏற்ற மாற்றத்திற்கு” தான் பொறுப்பு என்றும் கூறினார். முன்னர் அதிக இறக்குமதி வரிகளை நீக்குவதற்கான அமெரிக்க […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

புலிகளுக்காக எனது ஆதரவு குரல் ஒலிக்கும: வைகோ சூளுரை!

  • February 25, 2026
  • 0 Comments

“நான்; எப்போதும் விடுதலைப் புலிகள் ஆதரவாளன்தான். உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சொந்தங்களுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுப்பேன்.” இவ்வாறு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ MDMK General Secretary Vaiko தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி வைகோவால் தொடுக்கப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கின் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே வைகோ மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்கும்வரை போராடுவோம்: தமிழக முதல்வர் உறுதி!

  • February 25, 2026
  • 0 Comments

இந்தியாவில் நீண்டகாலமாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும்வரை அதற்காக தி.மு.க. தொடர்ந்து குரல் எழுப்பும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் M.K. Stalin உறுதியளித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 90 வீடுகளை நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பின்னர் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் […]

இந்தியா தமிழ்நாடு

புதிய கட்சி தொடங்கினார் சசிகலா!

  • February 25, 2026
  • 0 Comments

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பான அரசியல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை வி.கே. சசிகலா V.K. Sasikala நிறுவியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். ஊழல் வழக்கில் 2017 ஆம் ஆண்டு அவர் சிறை சென்றதால், அந்த பதவியை எடப்பாடி பழனிசாமி Edappadi Palaniswami கைப்பற்றினார். அதன்பின் டிடிவி தினகரன் TTV Dinakaran , முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் O. Panneerselvam போன்றோர் […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது!

  • February 25, 2026
  • 0 Comments

அரச புலனாய்வுப் பிரிவின் State Intelligence Services (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே Suresh Saleh கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவின் CID குழுவொன்றினாலேயே பெலியகொட பகுதியில் வைத்து இன்று (25) அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் சந்தேக நபராகக் கருதப்படுகின்றார். மேற்படி தாக்குதல் சம்பவம் நடைபெறும் காலப்பகுதியில் மலேசியாவிலுள்ள இலங்கை தூதுரகத்தின் ஆலோசகராக பதவி வகித்துள்ளார். உயிர்த்த […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுப்பு: பிரிட்டன் 2 ஆவது இடத்தில்!

  • February 25, 2026
  • 0 Comments

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல் பெப்ரவரி 22 வரையான காலப்பகுதிக்குள் 5 லட்சத்து 5 ஆயிரத்து 751 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 89 ஆயிரத்து 277 பேரும், பிரிட்டனில் இருந்து 55 ஆயிரத்து 407 பேரும், ரஷ்யாவில் இருந்து 45 ஆயிரத்து 351 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து 35 ஆயிரத்து 413 பேரும், […]

விளையாட்டு

T -20 உலகக்கிண்ண தொடரில் சதமடித்த முதல் கெப்டன்!

  • February 25, 2026
  • 0 Comments

ICC T20 உலகக் கிண்ண தொடரில் சதம் அடித்த முதல் தலைவர் என்ற சாதனையை இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புரூக் Harry Brook படைத்தார். ICC T20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர்8 சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துEngland , பாகிஸ்தான் Pakistan அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து […]

ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் : வாக்களிப்பை புறக்கணித்த இலங்கை!

  • February 25, 2026
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கையும் இந்தியாவும் வாக்களிக்கவில்லை. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததன் நான்காவது ஆண்டு நிறைவையொட்டி “உக்ரைனில் நீடித்த அமைதிக்கான ஆதரவு” என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானம், சமர்பிக்கப்பட்டது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை இதை ஏற்றுக்கொண்டது, 107 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்த நிலையில், 51 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்துள்ளன. இலங்கை மற்றும் இந்தியாவைத் தவிர, பஹ்ரைன், பங்களாதேஷ், […]

error: Content is protected !!