இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

முடக்கப்பட்ட ரஷ்ய பணத்தை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திடம் செலென்ஸ்கி அவசர கோரிக்கை

  • December 18, 2025
  • 0 Comments

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களிடம் அவசரமாக பல பில்லியன் யூரோ கடனை வழங்குமாறு கோரியுள்ளார். இந்த கடன், ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் பணத்திலிருந்து வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் அவசர உச்சிமாநாட்டிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், உக்ரைனுக்கு தற்போது  கடுமையான நிதி சிக்கல் காணப்படுகிறது. வரும் வசந்த காலத்துக்குள் நிதி உதவி கிடைக்கவில்லை என்றால், ட்ரோன் உற்பத்தி உள்ளிட்ட இராணுவ […]

இந்தியா செய்தி

உத்தரப்பிரதேசத்தில் மூடுபனி காரணமாக தேநீர் கடைக்குள் மோதிய லாரி – இருவர் மரணம்

  • December 18, 2025
  • 0 Comments

உத்தரப்பிரதேசத்தின்(Uttar Pradesh) லம்புவா(Lambua) பகுதியில் அடர்ந்த மூடுபனி காரணமாக ஒரு லாரி தேநீர் கடைக்குள் மோதியதில் லாரி ஓட்டுநர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். தியாராவிலிருந்து(Diyara) லம்புவா(Lambua) நோக்கி வேகமாகச் சென்ற லாரி மூடுபனி காரணமாக ஒரு ஓலை தேநீர் கடையில் மோதி பின்னர் ஒரு மரத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேநீர் கடை உரிமையாளரின் 28 வயது மகன் ரோஹித்(Rohit) மற்றும் 32 வயது லாரி […]

இலங்கை செய்தி

கொட்டாஞ்சேனையில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் பலி

  • December 18, 2025
  • 0 Comments

கொட்டாஞ்சேனை 6 ஆம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (18) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடையொன்றிற்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்த நபரைக் இலக்குவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகம் செய்தி

3 நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்

  • December 18, 2025
  • 0 Comments

இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்(Pakistan) பல்வேறு நாடுகளிலிருந்து பிச்சை எடுத்ததற்காக நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பின்(FIA) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினர் அகா ரஃபியுல்லா(Agha Rafiullah) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்டுள்ளது. இந்த ஆண்டு பிச்சை எடுத்ததற்காக மொத்தம் 51,000 பாகிஸ்தானியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ராஜா ரிஃபத் முக்தார்(Raja Rifaat Mukhtar) தெரிவித்துள்ளார். இதில் சவுதி அரேபியா(Saudi Arabia) […]

ஐரோப்பா

ரஷ்ய நிழல் கடற்படையின் 41 கப்பல்களுக்கு தடை விதிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் நிழல் கடற்படையின் 41 கப்பல்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்துள்ளது. இதன் மூலம் தடை விதிக்கப்பட்ட கப்பல்களின் மொத்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது. கப்பல்கள் இப்போது ஐரோப்பிய ஒன்றிய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடல்சார் போக்குவரத்து தொடர்பான பரந்த அளவிலான சேவைகளை இனி பெற முடியாது என்றும் ஐரோப்பிய கவுன்சில் அறிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை 19 தடைகளை விதித்துள்ளது.  ஆனால் மொஸ்கோ தடைகளுக்கு ஏற்ப தனது […]

அரசியல் இலங்கை செய்தி

மனோவின் யோசனைக்கு ராதா போர்க்கொடி: மலையகத்தைவிட்டு வெளியேற மறுப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

“மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று குடியேறுவதற்கு தயாரில்லை. மலையகம்தான் எங்களின் தாயகம்.” இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மலையக மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணி வழங்கப்படாவிட்டால், அவர்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றுவதற்கு தயார் என தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் அறிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் பதிவொன்றை பகிர்ந்தே சுமந்திரன் மேற்படி அறிவிப்பை விடுத்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – இரண்டாம் நாள் முடிவில் 158 ஓட்டங்கள் பின்னிலையில் இங்கிலாந்து

  • December 18, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி அடலெய்ட்(Adelaide) மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 91.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 371 ஓட்டங்களை பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில், அலெக்ஸ் கரே(Alex Carey) 106 ஓட்டங்களும் உஸ்மான் கவாஜா(Usman […]

உலகம் செய்தி

ஆயுதங்களை வழங்குவதால் தைவானின் அழிந்த விதியை காப்பாற்ற முடியாது!

  • December 18, 2025
  • 0 Comments

தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா 11 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் சீனா எதிர்வினையாற்றியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் (Guo Jiakun), தைவான் சுதந்திரத்திற்கு ஆயுதம் வழங்கி உதவுவதன் மூலம் அமெரிக்கா தனக்கு தானே தீவைத்துக்கொள்ளும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக விமர்சித்துள்ளார். இதனால் தைவானின் அழிந்த விதியைக் காப்பாற்ற முடியாது எனவும் இந்த நடவடிக்கையானது தைவான் ஜலசந்தியை இராணுவ மோதல் மற்றும் போரின் ஆபத்தான சூழ்நிலையை நோக்கித் தள்ளுவதை […]

இலங்கை செய்தி

திருகோணமலை உட்பட பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு

  • December 18, 2025
  • 0 Comments

மகாவெலி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீரேந்து பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையின் காரணமாக, அடுத்த 48 மணிநேரங்களில் மகாவெலி கங்கைக்கரையோரமாக உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படும் சாத்தியம் உள்ளது. இதன் கீழ் பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகள் அடங்கும்: கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ, மற்றும் திம்புலாகல. மேலும், மட்டக்களப்பு–பொலன்னறுவை பிரதான வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விகாரைக்கு செல்லும் பாதை, மற்றும் […]

இலங்கை செய்தி

யாழ் மாவட்ட வெள்ள நிவாரணத்திற்காக 365.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு: அரசாங்க அதிபர் தகவல்

  • December 18, 2025
  • 0 Comments

ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில், வேலணை பிரதேச செயலகத்தில் இன்று மாபெரும் மக்கள் நடமாடும் சேவை நடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தீவக மக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நகர்ப்புறங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் நோக்கில் இச்சேவை முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர், யாழ் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 365.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்கும் போது கிராம மட்ட உத்தியோகத்தர்கள் […]

error: Content is protected !!