செய்தி விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

  • October 31, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில், இன்று மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் இரண்டாவது T20 போட்டி நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பந்து வீச்சில் சிக்கி […]

பொழுதுபோக்கு

புதிய சீரியலில் கமிட்டாகிய சிறகடிக்க ஆசை ரவி… அட இந்த கதையா?

  • October 31, 2025
  • 0 Comments

சன் டிவி சீரியல்களுக்கு டாப் கொடுக்கும் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. சீரியல் தொடங்கப்பட்ட நாள் முதல் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் டிஆர்பியிலும் டாப்பில் இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டனர். அதிலும் முத்து – மீனாவின் ஜோடி சூப்பராம். அதேபோல் ரவி – சுருதியும் கியூட்டான ஜோடிதான். ரவி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் ரீச் ஆனவர் தான் பிரணவ். இவர் […]

பொழுதுபோக்கு

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரனின் புதிய பட அப்டேட்

  • October 31, 2025
  • 0 Comments

அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்துடைய ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த இருவரின் காம்போவில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் புதிய படத்தைத் தொடங்குவதற்கு முன்பாக கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் அஜித்குமார் பொது வெளியில் அதிகமாக காணப்படுகின்றார். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகின்றார். இந்த நிலையில் அஜித்குமார் தனது புதிய படத்திற்குத் தயாராகி வருகிறார். இந்தப் படத்தையும் குட் பேட் அக்லி […]

உலகம்

போர் நிறுத்த விதிமுறைகளின்படி 30 கைதிகளின் உடல்களை காசாவிற்கு திருப்பி அனுப்பிய இஸ்ரேல்

  • October 31, 2025
  • 0 Comments

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முயற்சியால் கடந்த 10ம் திகதி இஸ்ரேல் , ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஹமாஸ் தங்கள் வசம் உயிருடன் இருந்த 20 […]

இலங்கை

“மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்”: ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி

  • October 31, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தக்கூடிய வரவு- செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைக்கக்கூடும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்(S.M. Marikar) மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் மரிக்கார் மேலும் கூறியவை வருமாறு, “மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து […]

இலங்கை

இலங்கையில் உள்நாட்டுப் பெயரில் தரமற்ற அரிசி – மக்களுக்கு எச்சரிக்கை

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியின் வர்த்தக நாமம் அடங்கிய பொதிகளில் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த அரிசி விற்பனை செய்யப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் புறக்கோட்டையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றைச் சோதனையிட்ட போது தரம் குறைந்த அரிசி விற்பனை செய்யப்பட்டமை தெரிய வந்தது. இந்த வர்த்தக நிலையம் சீல் வைத்து மூடப்பட்டதோடு, வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் […]

உலகம்

இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

  • October 31, 2025
  • 0 Comments

அடுத்த 10 ஆண்டுக்கு பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா – அமெரிக்கா இடையே வரிவிதிப்பு விவகாரத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. ஆசியான் நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் மாநாடு கோலாலம்பூரில் நடந்தது. இந்த மாநாட்டில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்(Rajnath Singh) மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்(Pete Hexeth) சந்தித்துப் பேசினர். முடிவில், 10 ஆண்டுக்கான ஒத்துழைப்பு […]

ஐரோப்பா செய்தி

காசா மக்களுக்கு இங்கிலாந்து வழங்கும் அரிய வாய்ப்பு!

  • October 31, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் உதவி தொகை பெற்று கல்வி கற்க செல்லும் காசா மக்கள் தற்போது தங்களது கூட்டாளிகள், குழந்தைகளை அழைத்து வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனப் பகுதியைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வாய்ப்பை பெற்றனர். உள்துறை அலுவலகம் ஒப்புக்கொண்ட சிறப்பு ஏற்பாடுகளின் கீழ் அவர்கள் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் உதவித்தொகையைப் பெற முடியாது என்று கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து உதவி தொகை பெற்றவர்களை […]

இலங்கை

இலங்கை சுகாதார சேவையில் 700 தாதியர்கள் – புதிய சேவையை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை!

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கை மக்களுக்கு மிகச் சிறப்பாக சுகாதார சேவைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக துறைசார் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். திசைமுகப்படுத்தல் பயிற்சி நெறிக்காக விஞ்ஞானமானி தாதியர் பட்டதாரிகள் 700 பேரை இணைத்துக் கொள்வது தொடர்பான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தாதியர் சேவையில் கணிசமான வெற்றிடங்கள் உள்ளன. வெற்றிடங்களை நிரப்புவதற்குத் துரிதமாக நியமனங்கள் வழங்கப்படும். சுகாதார […]

இந்தியா

சென்னையில் அடுத்தடுத்து கரையொதுங்கிய சடலங்களால் பரபரப்பு!

  • October 31, 2025
  • 0 Comments

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் இன்று கரை ஒதுங்கியுள்ளன. இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலில் விளையாடச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில், அவரை காப்பாற்றச் சென்ற மற்ற பெண்களும் பலியாகியுள்ளனர். அவர்களின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.  ஷாலினி, தேவகி செல்வம், பவானி, காயத்திரி ஆகியோரின் […]

error: Content is protected !!