கடந்த அரசாங்கங்களை விட NPP அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள மக்கள்!
தற்போதைய அரசாங்கம் ஊழலை நிவர்த்தி செய்வதில் திறம்பட செயல்படும் என்று இலங்கை மக்களில் 38.7 சதவீதம் பேர் நம்புவதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த அரசாங்கங்கள் ஊழலை கையாள்வதில் திறம்பட செயல்பட்டதாக 12.5 சதவீதமானோர் நம்பியதாகவும் அந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களுக்கு ஊழல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அண்மைக்காலமாக முன்னாள் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]













