இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

துப்பாக்கிகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

  • November 1, 2025
  • 0 Comments

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கிகளை வழங்குமாறு கோரியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். மேலும் இந்தக் கோரிக்கைகள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறைத் தலைவர் தலைமையில் சமீபத்தில் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவு […]

இலங்கை

காலியில் தனிப்பட்ட தகராறு காரணமாக கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை

  • November 1, 2025
  • 0 Comments

காலியில் அஹூங்கல்ல காவல் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அஹூங்கல்ல, பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (31) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபரான […]

உலகம் செய்தி

இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்று பணயக்கைதிகளின் உடல்கள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்!

  • November 1, 2025
  • 0 Comments

காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு மாற்றப்பட்ட மூன்று பணயக்கைதிகளின் உடல்கள் காணாமல் போன பணயக்கைதிகளில் எவருக்கும் சொந்தமானவை அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நேற்று குறித்த மூன்று உடல்களும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துருப்புக்களால் மீட்கப்பட்ட பணயக்கைதியின் உடல்களை விடுவிப்பதன் மூலம் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே போரில் கொல்லப்பட்ட 360 பாலஸ்தீன போராளிகளுக்கு ஈடாக இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க ஹமாஸ் […]

பொழுதுபோக்கு

“பிக்பாஸ் தமிழ்” இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?

  • November 1, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், 4வது வாரமான இந்த வாரத்தில் யார் எலிமினேட் ஆகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை பல போட்டியாளர்கள் புரிந்து கொள்ளாமல் தரக்குறைவாக பேசியும், கீழ்த்தரமான செயல்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற லாக்கர் டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் வழக்கம் போல் கத்தி கூச்சலிட்டும், தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி தான் வருகின்றனர். இதற்கு விஜய் சேதுபதி என்ன கண்டனம் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் […]

இலங்கை செய்தி

ருமேனியாவில் தொழில்வாய்ப்பு – ஏறக்குறைய 740 மில்லியன் மோசடி!

  • November 1, 2025
  • 0 Comments

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி  740 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அவ் நிறுவனத்தின் இயக்குநரை மஹரகம குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. சந்தேக நபர் நேற்று (31) நுகேகொடை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பாக 400க்கும் மேற்பட்ட […]

உலகம்

அமெரிக்காவில் காவல்துறையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிறுவன்!

  • November 1, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் தனது பாட்டியைக் கொன்ற 13 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட 68 வயதான  பாட்டியின் உடல் அவர் வசித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்ததாக  கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் அவரை  கைது செய்ய முயன்றபோது, ​​சிறுவன் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்தே  காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், வட […]

இந்தியா

ஆந்திராவில் உள்ள இந்து கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி, பலர் காயம்

  • November 1, 2025
  • 0 Comments

தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு இந்து கோவிலில் இன்று(01) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்தனர். என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான அமராவதியிலிருந்து(Amaravati) சுமார் 548 கி.மீ வடகிழக்கில் உள்ள ஸ்ரீகாகுளம்(Srikakulam) மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில்(Kasibugga) உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்து மதத்தின் புனித நாளான ஏகாதசியை முன்னிட்டு அங்கு ஏராளமானோர் கூடியிருந்தனர் கோயிலில் கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக […]

இலங்கை

கெஹேல்பத்தர பத்மேவிடமிருந்து துப்பாக்கி வாங்கிய வியாபாரியொருவர் கைது

  • November 1, 2025
  • 0 Comments

பாதாள குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மேவிடமிருந்து துப்பாக்கியொன்றை வாங்கினார் எனக் கூறப்படும் வியாபாரியொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரே, மேல்மாகாண குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த வியாபாரியின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது துப்பாக்கியும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கியை வாங்குவதற்காக வியாபாரி, மூன்றரை லட்சம் ரூபாவை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது. அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

உலகம்

இஸ்தான்புல் பேச்சுவார்த்தையை அடுத்து போர் நிறுத்தத்தை நீட்டிக்க பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஒப்புதல்

  • November 1, 2025
  • 0 Comments

பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போா் நிறுத்தத்தை நீடிக்க இரு நாடுகளும் நேற்று (31) ஒப்புக்கொண்டன. மேலும், அமைதிப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன. இது குறித்து இரு நாட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடத்திவைத்த துருக்கி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் ஒக்டோபா் 15ம் திகதி அமுலுக்கு வந்த போா் நிறுத்தத்தை தொடா்ந்து கடைப்பிடிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனா். அந்த போா் நிறுத்த அமுலாக்கம் குறித்து இரு நாட்டு […]

ஐரோப்பா செய்தி

சில மணி நேரங்களில் மரணத்தை ஏற்படுத்தும் தொற்று – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • November 1, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் மூளை காய்ச்சலை ஏற்படுத்தும் மெனிங்கோகோகல் (meningococcal) வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் பெரும்பாலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், வைரஸ் தொற்று வேகமாக பரவக் கூடியது எனவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த பாக்டீரியா தொற்று, சில மணி நேரங்களுக்குள் பரவி, மரணத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே  தடுப்பூசி போடப்படுவது குறைந்த அளவில் இருப்பதால் அவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக […]

error: Content is protected !!