செய்தி

மத்திய கிழக்கு வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித மந்திராலோசனை!

  • March 5, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள வெளிவிவகார அமைச்சர்களுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். தொலைபேசி ஊடாகவே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனேயே அவர் கலந்துரையாடியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் மேற்படி நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்தார். மேற்படி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார். […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து இலங்கை தொடர்ந்து ஆராய்வு!

  • March 5, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. தற்போதைய நெருக்கடி நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு […]

இலங்கை செய்தி

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்புக்காக உரிய தலையீடு: இலங்கை உறுதி!

  • March 5, 2026
  • 0 Comments

“ இந்து சமுத்திரத்தின் அமைதிதான் எமது எதிர்பார்ப்பாகும். இதற்காக உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். இந்து சமுத்திர அமைதி மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (05) கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள சர்வதேச எல்லையில் வைத்து அனர்த்தத்துக்குள்ளான ஈரான் கப்பலில் இருந்து 32 […]

ஆஸ்திரேலியா உலகம்

மத்திய கிழக்கு போர்: முக்கிய இரு பிரதமர்கள் விடுத்துள்ள கூட்டு அறிவிப்பு!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானின் அணுஆயுத அச்சுறுத்தல் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று கனடா Canada மற்றும் ஆஸ்திரேலியா Australia ஆகிய நாடுகளின் பிரதமர்கள் வலியுறுத்தியுள்ளனர். மத்திய கிழக்கில் போர் நீடிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை எனக் கூறிய அவர்கள், போர் நிறுத்தத்தை பகிரங்கமாக வலியுறுத்தவில்லை. கனடா பிரதமர் மார்க் கார்னி Mark Carney ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று கனடா பிரதமர் உரையாற்றினார். அதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தினர். பின்னர் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர். […]

இந்தியா செய்தி

பதவி துறக்கிறார் பிஹார் மாநில முதல்வர்!

  • March 5, 2026
  • 0 Comments

பிஹார் Bihar மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் Nitish Kumar விரைவில் பதவி துறக்க உள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மாநிலங்களவை Rajya Sabha தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது. இதில் ஒரு தொகுதியில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி […]

இலங்கை

கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 5, 2026
  • 0 Comments

கட்டாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளையும் தங்களைப் பற்றிய விபரங்களைத் தூதரகத்தில் பதிவு செய்யுமாறு கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள ‘கூகுள் படிவத்தை’ (Google Form) பூர்த்தி செய்வதன் மூலம் இலங்கையர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் தொடர்புகளைப் பேணுவதற்கும், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்கும், மக்கள் நலன் சார்ந்த விடயங்களை முன்னெடுப்பதற்குமே இந்தத் தரவு சேகரிப்பு நடத்தப்படுகிறது. தற்போதைய பிராந்திய பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, […]

பொழுதுபோக்கு

பிரபல பாடகி சைந்தவியின் உண்மை முகம்! வெளியானது வீடியோ!

  • March 5, 2026
  • 0 Comments

பிரபல பின்னணி பாடகி சைந்தவி (Saindhavi) செய்த ஒரு செயல் தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அண்மையில் முடிவடைந்த சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பவித்ரா, தனது வாழ்க்கை கதையை ஆரம்பத்திலேயே மேடையில் பகிர்ந்திருந்தார். அந்த நேரத்தில் பாடகி சைந்தவி, “நீங்கள் தனியாக இல்லை, நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு உண்மையான சகோதரி போல நான் துணையாக இருப்பேன்” என ஆறுதல் கூறியிருந்தார்.‌ பொதுவாக நிகழ்ச்சிகளில் இப்படியான வார்த்தைகள் சொல்லப்படுவது வழக்கம்தான். […]

செய்தி

ட்ரம்பின் மிரட்டலுக்கு அடிபணியோம்: ஸ்பெயின் பிரதமர் திட்டவட்டம்!

  • March 5, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு அடிபணிந்து தமது முடிவை மாற்றப்போவதில்லை என்று ஸ்பெயின் Spanish பிரதமர் பெட்ரோ சான்செஸ் Pedro Sanchez திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போருக்கு ஸ்பெயின் போர்க்கொடி தூக்கியுள்ளது. தமது நாட்டிலுள்ள கூட்டு ராணுவத் தளங்களை ஈரான் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது. இதனால் கடுப்பாகிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், “ பேச்சை கேட்காவிட்டால் ஸ்பெயின் உடனான வர்த்தகத்தை முற்றிலுமாக துண்டிப்போம் ” என கடந்த […]

உலகம்

ட்ரம்பிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிப்பு : தொடரும் தரைவழித் தாக்குதல்!

  • March 5, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி மீது கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க செனட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், தீர்மானத்திற்கு  ஆதரவாக 47 வாக்குகளாலும் எதிராக 53 வாக்குகளும் பதிவாகியுள்ளன. தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் தெஹ்ரான் நகரை குறிவைத்து இஸ்ரேல் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், இஸ்ரேல் […]

செய்தி

ஈரான் போர்க்கப்பல்மீது தாக்குதல்: 84 சடலங்கள் மீட்பு!

  • March 5, 2026
  • 0 Comments

இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பாலுள்ள சர்வதேச கடற்பரப்பில் தாக்குதலுக்கு இலக்கான ஈரான் போர்க் கப்பலில் இருந்தாகக் கூறப்படும் 84 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. காலி, கராபிட்டிய வைத்தியசாலைக்கு சடலங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ஈரானுக்கு சொந்தமான போர்க்கப்பலொன்றே இந்து சமுத்திரத்தில் வைத்து தாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேற்படி கப்பலில் இருந்து 32 பேரை இலங்கை உயிருடன் மீட்டது. காயமடைந்தவர்கள் இலங்கையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.  

error: Content is protected !!