இலங்கை

இலங்கையில் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

  • November 3, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பதுடன், சுகவீன பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. சுகவீனத்தையும் சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையைக் குறிக்கும் வெப்பச் சுட்டெண் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் “Caution Level” எனப்படும் எச்சரிக்கை அளவிற்கு உயர வாய்ப்புள்ளது. குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெப்பம் தொடர்பான நோய்களைத் […]

உலகம்

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் – பரபரப்பாகும் மத்திய கிழக்கு

  • November 3, 2025
  • 0 Comments

லெபனானில் (Lebanon) தமது படைகள் நிலைகொண்டுள்ள பகுதிகளில் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு, தமது ஆயுதப் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அவ்வாறு குறைக்காத பட்சத்தில் தக்க பதிலடி வழங்கப்படும் என இஸ்ரேல் (Israel) எச்சரித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பு நெருப்புடன் விளையாடுவதாக இஸ்ரேல் (Israel) பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) எச்சரித்துள்ளார். லெபனானின் தெற்கில் ஆயுதங்களைக் குறைக்க வேண்டும். இதனை மீறினால் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் வாழும் மக்களுக்கான அச்சுறுத்தலை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் […]

செய்தி

சுவிட்ஸர்லாந்தில் இரகசியமாகக் கண்காணிக்கப்படும் மக்கள் – சீனக் குழுவால் அச்சுறுத்தல்

  • November 3, 2025
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் திபெத்தியர்கள் மற்றும் உய்குர் இனத்தவர்கள் இரகசியமாக கண்காணிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சீனாவால் கண்காணிக்கப்படுகிறார்கள் அல்லது தங்கள் சமூகத்தினரை வேவுபார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுவிஸ் நாட்டின், பாசல் பல்கலைக்கழகத்திடம் நீதித்துறைக்கான பெடரல் அலுவலகம் ஒரு அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொண்டது. அதில், இரண்டு குழுக்களும் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உட்படப் பல வழிகளில் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த குழுக்களுடன் தொடர்புடைய சுவிஸ் […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் – மாநிலத்தை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்

  • November 3, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தொடர்ந்து நடக்கும் குற்றச் செயல்களால் ஆயிரக்கணக்கான விக்டோரிய மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, விக்டோரியாவின் மக்கள் தொகை குறைந்துள்ளதுடன், 24,000 க்கும் மேற்பட்டோர் குயின்ஸ்லாந்துக்குக் குடிபெயர்ந்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியக அறிக்கை காட்டுகிறது. கோல்ட் கோஸ்ட் மற்றும் சன்ஷைன் கோஸ்ட் போன்ற நகரங்களுக்கு விக்டோரிய மக்கள் குடிபெயர்ந்து வருவதாகவும் இது காட்டுகிறது. இதற்கிடையில், குற்றச் செயல்கள் குறித்த பயம் காரணமாக, பல விக்டோரியர்கள் பிற மாநிலங்களில் சொத்துக்களை […]

உலகம் செய்தி

3,500 ஆண்டுகள் பழமையான சிற்பத்தை எகிப்துக்கு திருப்பி அனுப்பும் நெதர்லாந்து

  • November 2, 2025
  • 0 Comments

ஒரு டச்சு கலைக் கண்காட்சியில் கிடைத்த 3,500 ஆண்டுகள் பழமையான சிற்பத்தை எகிப்துக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று நெதர்லாந்து(Netherland) பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எகிப்துக்கு(Egypt) விஜயம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப்(Dick Schoof) ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியைச்(Abdel Fattah al-Sisi) சந்தித்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கிமு 1479–1425 வரையிலான பார்வோன் துட்மோஸ் IIIன்(Pharaoh Thutmose III) ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியைச் சித்தரிக்கும் கலைப்பொருள் 2011ம் ஆண்டு திருடப்பட்டு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டதாக […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம்

  • November 2, 2025
  • 0 Comments

உக்ரைன் முழுவதும் ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பகுதியில் நடந்த ரஷ்ய வான்வழித் தாக்குதலில் 11 மற்றும் 14 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு ஒடேசா(Odesa) பகுதியில் ரஷ்ய ஜெட் விமானங்கள் பல வாகனங்களை குண்டுவீசித் தாக்கியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

இலங்கை செய்தி

இலங்கை: ஹொரணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

  • November 2, 2025
  • 0 Comments

ஹொரணையில்(Horana) உள்ள சிரில்டன் வட்டே(Sirildon Watte) பகுதியில் நேற்று(02) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த தாக்குதல் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், சந்தேக நபர்களை அடையாளம் காணவும், தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறியவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஐரோப்பா செய்தி

காவலில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரு பிரெஞ்சு அதிகாரிகள்

  • November 2, 2025
  • 0 Comments

இரண்டு பிரெஞ்சு காவல்துறை அதிகாரிகள் காவலில் இருந்தபோது ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர்களில் ஒருவர் தனது தொலைபேசியில் இந்த செயலை படம்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸின் வடகிழக்கு புறநகரின் பாபிக்னியில்(Bobigny) உள்ள நீதிமன்றத்தில் காவலில் இருந்தபோது தன்னைத் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியதை அடுத்து, அதிகாரிகள் ஆரம்பத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 26 வயதுடைய பெண்ணை குற்றம் சாட்டப்பட்ட 23 மற்றும் 35 வயதுடைய இரண்டு […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட 25 வயது பெண்

  • November 2, 2025
  • 0 Comments

கர்நாடகாவின் பெரியபட்ணாவில்(Periyapatna) உள்ள பெட்டடபுராவில்(Pettahpura) ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 25 வயதுடைய அரபியா பானு(Arabiya Bhanu), தனது ஒன்றரை வயது மகள் மற்றும் பத்து நாள் பெண் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில், அவரது கணவர் பெங்களூருவில்(Bengaluru) உள்ள ஒரு வணிக வளாகத்தில் வேலை செய்கிறார் என்றும், அவர் பெட்டடபுராவில் உள்ள தனது வீட்டில் […]

செய்தி விளையாட்டு

முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்தியா

  • November 2, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெற்ற தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதின. நாணய சுழற்சியை வென்று தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ஷபாலி […]

error: Content is protected !!