பொழுதுபோக்கு

‘கும்கி 2’ முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது

  • November 2, 2025
  • 0 Comments

பிரபு சாலமன் இயக்கியுள்ள ‘கும்கி 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொத்தி பொத்தி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் பாடலை அவரே பாடியுள்ளார். மோகன் ராஜ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். மதி, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதேவேளை, இம்ான் இசையில் வெளிவந்த கும்கி 1 திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் ரீச்சாகி உள்ளது. அதேபோல் கும்கி 2 பாடலும் […]

விளையாட்டு

கோப்பை யாருக்கு? மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று

  • November 2, 2025
  • 0 Comments

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த முறை, இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் இத்தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இத்தொடரில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே […]

உலகம்

இந்திய விமான நிலையத்தில் பயணிகள் பையில் சிக்கிய குரங்குகள்

  • November 2, 2025
  • 0 Comments

இந்திய விமான நிலையம் ஒன்றில் பயணியின் பையில் அரிய வகைக் குரங்குகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அந்தப் பயணி மும்பை விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து தாய்லாந்து வழியாக இந்தியா சென்ற பயணியிடம் சுங்க அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது பயணப் பையிலிருந்து குரங்குகளைக் கண்டுபிடித்துள்ளனர். அப்போது இரண்டு குரங்குகளில் ஒன்று உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. விலங்குகளை நாட்டுக்கு நாடு கடத்தும் கும்பல் ஒன்றினால் குரங்குகள் தன்னிடம் கொடுக்கப்பட்டதாகச் சந்தேக நபரான பயணி தெரிவித்துள்ளார். […]

இலங்கை

முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு அழைப்பு – தேசிய மக்கள் சக்தியின் நுகேகொடை கூட்டத்தில் எதிர்பார்ப்பு

  • November 2, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கூட்டத்தில் முக்கிய அரசியல் புள்ளிகளை களமிறக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு களமிறங்குவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகள் பங்கேற்றாலும், அக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தச் சூழ்நிலையிலேயே, […]

வாழ்வியல்

பார்வைக்கு அச்சுறுத்தலாகும் உயர் இரத்த அழுத்தம் – மருத்துவர்கள் எச்சரிக்கை!

  • November 2, 2025
  • 0 Comments

உலக மக்களை அச்சுறுத்தும் உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) மனிதனின் பார்வைத் திறனைப் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உயர் இரத்த அழுத்த விழித்திரை நோய் (Hypertensive Retinopathy) எனப்படும் ஒரு நிலைமையே கண்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது, மூளைக்கு ஒளி சமிக்ஞைகளை அனுப்ப உதவும் கண்ணின் பகுதியான விழித்திரையைச் சேதப்படுத்துகிறது. இரத்த அழுத்தம் சடுதியாக மிக அதிகமாக இருக்கும்போது, அது விழித்திரையில் உள்ள சிறிய இரத்த நாளங்களைச் சேதப்படுத்தும். பின்னர் […]

இலங்கை

போராட்டம் குறித்த அச்சத்தில் அரசாங்கம்! ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தகவல்

  • November 2, 2025
  • 0 Comments

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் குறித்து அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மொட்டு கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டார். “21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தால் ஆளுங்கட்சிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து விடயங்களையும் மறந்து அப்போராட்டம் பற்றிப் பேசுகின்றது. எதிரணியிலுள்ள சில கட்சிகள் எதிரணியையே தாக்குகின்றன. அக்கட்சிகளுடன் எமக்கு தேர்தல் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் நடந்த பயங்கரம் – தொடரூந்தில் பயணிகள் மீது தாக்குதல் – 9 பேர் ஆபத்தான நிலையில் (update)

  • November 2, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் தொடரூந்தில் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். […]

இலங்கை செய்தி

உளவுத்துறை எச்சரிக்கை – ஞானசார தேரர் பாதுகாப்பு கோரிக்கை!

  • November 2, 2025
  • 0 Comments

தனக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். பாதாள குழுக்களிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகளை தமக்கு வழங்குமாறு தேரர் கோரியுள்ளார் என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலனாய்வு பிரிவினர்கள் தனக்குள்ள அச்சுறுத்தல் பற்றி விகாரைக்கு வந்து தெரியப்படுத்தியுள்ளனர் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, பாதுகாப்பு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு சபாநாயகர் மற்றும் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் மரணங்கள் அதிகரிப்பு – கொவிட்டை விட அதிக உயிரிழப்புகள்

  • November 2, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இன்ப்ளூயன்ஸா (காய்ச்சல்) மரணங்கள் தற்போது கொவிட் மரணங்களை விட அதிகமாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசி போடாததாலும், வைரஸைக் கவனிக்காததாலும் இந்த அளவு பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் இன்ப்ளூயன்ஸாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 265 ஆக இருந்தது. அதே நேரத்தில் கொவிட் தொடர்பான மரணங்கள் 195 மட்டுமே பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு 410,000 இன்ப்ளூயன்ஸா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவமனைப் பதிவுகளும் காட்டுகின்றன. இன்ப்ளூயன்ஸாவால் ஏற்படும் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் உச்சக்கட்ட நெருக்கடி நிலை – 4.2 கோடி அமெரிக்கர்கள் பாதிக்கப்படும் அபாயம்

  • November 2, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் அவசர நிதியைப் பயன்படுத்தி துணை ஊட்டச்சத்து உதவித் திட்டத்தின் (Supplemental Nutrition Assistance Program) சலுகைகளை ஓரளவு ஈடுகட்ட இரண்டு கூட்டாட்சி நீதிபதிகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால், ஒரு மாத கால அரசாங்க முடக்கத்திற்கு மத்தியில், 5.3 பில்லியன் டொலர் அவசர நிதியைப் பயன்படுத்தி சலுகைகளை ஈடுகட்ட முடியாது என்று வேளாண் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிடைக்கக்கூடிய பணத்தில் சிலவற்றைக் கொண்டு துணை […]

error: Content is protected !!