‘வரலாற்று திருப்பம்’: ஆஸ்திரேலிய ராணுவ தளபதியாக பெண் அதிகாரி நியமனம்!
125 வருடகால ஆஸ்திரேலிய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் Lieutenant General Susan Coyle, புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1987 ஆம் ஆண்டு சாதாரண சிப்பாயாக ராணுவத்தில் இணைந்த Susan Coyle, தகவல் போர்முறை உட்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் இந்த நியமனத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, பாதுகாப்புப் படைத் தளபதியாக (Chief of Defence Force) வைஸ் அட்மிரல் மார்க் ஹம்மண்ட் (Mark Hammond) நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 முதல் கடற்படைத் தளபதியாக பணியாற்றி வந்த நிலையிலேயே அவருக்கு மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.




