இலங்கை முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை: கம்மன்பில வெளியிட்ட தகவல்
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் தண்டனைக்கு எதிராக அவரது வழக்கறிஞர்கள் இன்று மேல்முறையீடு செய்வார்கள் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் (PHU) பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கம்மன்பில, வழக்கறிஞர்களுடனான உரையாடலின் போது, நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கவில்லை என்று அவர்கள் கூறியதாகக் கூறினார்.





