காதலனால் யுவதிக்கு நேர்ந்த கொடுமை
20 வயதுடைய யுவதியொருவரை ஹெரோயின் போதைப்பொருள் குடிக்கத் தூண்டிய சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யுவதியின் தாய் மற்றும் உறவினர்கள் வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்திற்கு வந்து இந்த முறைப்பாட்டை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த யுவதியின் காதலன் என கூறிக்கொள்ளும் 22 வயதுடைய இளைஞன் பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருளை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தர்கா நகரைச் சேர்ந்த சந்தேக நபர், பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர் இந்த யுவதியுடன் பல மாதங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தன்னை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று ஹெராயின் குடிக்க வைத்து போதைப்பொருளுக்கு அடிமையாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
யுவதிக்க போதைப்பொருள் கொடுத்து குடித்துவிட்டு, பாலியல் வன்கொடுமை செய்வதாக கூறியுள்ளார்.
இந்த உண்மைகளை கருத்திற் கொண்டு சம்பவத்திற்கு முகங்கொடுத்த யுவதியை களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார், அவர் போதைப்பொருளுக்கு அதிக அடிமையா என்பது தொடர்பில் சட்ட வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரான காதலனை கைது செய்வதற்கான விசாரணைகளையும் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.