GSP+ வரிச்சலுகையை தக்க வைப்பதில் இலங்கை தீவிரம்!
ஜி.எஸ்.பி. பிளஸ் GSP+ வரிச்சலுகையை தக்க வைத்துக்கொள்வதற்குரிய முயற்சியில் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் European Union இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் காலாவதியாகியுள்ளது.
இந்நிலையிலேயே அச்சலுகையை நீடித்துக்கொள்வதற்குரிய இராஜதந்திர முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் Emmanuel Macron ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake நடத்திய சந்திப்பின்போது இது பற்றி பேசப்பட்டது.
புதுடெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாக இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சு நடத்தினர்.
இதன்போதே ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளது.
இதனையடுத்து ஜிஎஸ்பி பிளஸ் வசதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு பிரான்ஸ் முழு ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதி மக்ரோன் உறுதியளித்துள்ளார்.
மேற்படி தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
2026 டிசம்பரில் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை காலாவதியாகவுள்ள நிலையில், அச்சலுகையை மீள பெறுவதற்குரிய விண்ணப்பத்தை இலங்கை முன்வைக்கவுள்ளது.




