மனித சிறுநீரை பயன்படுத்தி மரம் வளர்ப்பு – ஆஸ்திரேலியாவில் புதிய திட்டம்!
மனித சிறுநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட உரத்தைப் பயன்படுத்தி 4,500 மரங்கள் வரை வளர்க்க விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
இந்த திட்டம் ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் நகரில் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காக கடந்த ஜூலை மாதம் ஹாம்ப்ஷயரில் (Hampshire) நடந்த பூம்டவுன் (Boomtown’) திருவிழாவில் கலந்துகொண்ட 700 பேரிடமிருந்து சிறுநீர் சேகரிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்டலைச் சேர்ந்த NPK ரெக்கவரி என்ற புத்தொழில் நிறுவனம் இந்த உரத்தைத் தயாரித்துள்ளது.
வனத்துறை ஆணையத்திடமிருந்து கிடைத்த £435,627 மானியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் 03 ஆண்டுகாலத்தில் பயனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி, உள்ளூர் மர இனங்களுக்குப் புத்துயிர் அளிப்பதற்கும், நிலையான வனவியல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் ஒரு சுழற்சித் தீர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





