பிரித்தானியாவில் பல் மருத்துவ சேவையில் பெரும் நெருக்கடி – நோயாளர்கள் பெரும் சிரமம்
பிரித்தானியாவின் பொதுச் சுகாதார அமைப்பின் பல் மருத்துவ சேவையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலைமை மிக மோசமாக காணப்படுவதால், ஏழை நாடுகளில் மருத்துவ சேவைகள் வழங்க உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனமொன்று
தற்போது பிரித்தானியாவிற்கே அதிக சேவையை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மில்லியன் கணக்கான மக்கள் பொதுச் சுகாதார அமைப்பின் பல் மருத்துவ சேவைகளை அணுக சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைவான வருமானம் பெறுவோரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுச் சுகாதார அமைப்பில் பல் மருத்துவத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க “அடிப்படை சீர்திருத்தம்” அவசியம் என பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
பல் மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும் குறைந்த கட்டண அமைப்பு மற்றும் சிக்கலான ஒப்பந்த முறையால், பலர் பொதுச் சுகாதார சேவையை விட்டு தனியார் துறைக்கு சென்றுள்ளமையே நெருக்கடிக்கு காரணம் என கூறப்படுகிறது.
மேற்கு யார்க்ஷயரில் உள்ள Dewsbury பகுதியில், NHS பல் மருத்துவர்களை அணுக முடியாதவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க Dentaid, உள்ளூர் ஆதரவுக் குழுவுடன் இணைந்து செயல்படுகிறது.
சில இடங்களில் பல் மருத்துவ சேவைக்காக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.





