இலங்கை

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (9) காலை 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

உள்ளகப் பயிற்சி பெற்றவர்களுக்கான வைத்திய நியமனங்கள் அறிவிக்கப்பட்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 436 புதிய வைத்திய அதிகாரிகளுக்கான புதிய சேவை இடங்கள், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களினால் நேற்று(8) அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்த நியமனங்கள் வழங்கப்பட்ட முறையில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் அதிருப்தி காரணமாகவே இந்தத் திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!