04 இலட்சம் ரூபாவை தாண்டிய தங்க விலை – அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்
தங்கத்தின் விலை இன்றைய தினம் (23) 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்க பவுண் ஒன்று 370,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேசச் சந்தை நிலவரங்களுக்கமைய உள்நாட்டுச் தங்க சந்தையிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.





