ஐரோப்பா செய்தி

IRIS-T வான் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு வழங்கும் ஜெர்மனி!

சர்வதேச ஆதரவுடன் உக்ரைன் தனது வான் பாதுகாப்பு வலையமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஜெர்மனி நேற்று ஒன்பதாவது IRIS-T வான் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு  வழங்கியுள்ளது.

IRIS-T ஏவுகணை அமைப்பானது 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் ஜெர்மனி தலைமையிலான திட்டத்தால் உருவாக்கப்பட்டது.

விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தற்போது IRIS-T ஏவுகணை அமைப்பின் இரண்டு வகைகளை பயன்படுத்துகிறது.  ஒன்று 12 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. மற்றொன்று 08 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.

இவற்றைவிட அதிக தூரம் சென்று தாக்கக்கூடிய  IRIS-T ஏவுகணைகளும் உள்ளன.

இதற்கிடையே உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) மற்றும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) ஆகியோரால் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் கீழ், 2026 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு ஆதரவாக €11.5 பில்லியனை ஒதுக்க ஜெர்மனி உறுதியளித்துள்ளது.  இது கியேவின் (Kyiv) நீண்டகால பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!