ஐரோப்பா

எரிபொருள் விலையேற்றம் – அயர்லாந்தில் தொடர் போராட்டம்!

அயர்லாந்தில் சரக்கு  வாகன உரிமையாளர்கள் மற்றும் விவசாய ஒப்பந்தக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் காரணமாக எரிபொருள் விநியோகம் கடுமையான பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய எரிபொருள் கிடங்குகளுக்கு எதிராக மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தற்போது நான்காவது நாளாகத் தொடரும் இந்த பரவலான போராட்டம், நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகளில் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

டப்ளின் (Dublin) தெருக்களில் கட்டுப்படுத்தப்பட்ட அணுகலுடன் தொடங்கிய போராட்டங்கள், தற்போது கோர்க் கவுன்டியில் (Co Cork) உள்ள வைட்கேட்டில் (Whitegate) இருக்கும் ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்,  கால்வே நகரம் மற்றும் லிமெரிக் கவுன்டியில் (Co Limerick) உள்ள   கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய எரிபொருள் விநியோக மையங்களை முற்றுகையிடும் அளவுக்குத் தீவிரமடைந்துள்ளன.

விண்ணை முட்டும் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!