ஆஸ்திரேலியா செய்தி

ஆப்கானிஸ்தானில் போர்க்குற்றம்: ஆஸ்திரேலிய படை அதிகாரி கைது!

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் Australian Defence Force (ADF) முன்னாள் வீரர் ஒருவர் சிட்னி விமான நிலையத்தில் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 2005 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடத்தாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையின் ஓர் அங்கமாகவே இக்கைது இடம்பெற்றுள்ளது.

47 வயதான Ben Roberts-Smith என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை மற்றும் சிறப்பு விசாரணை அலுவலகத்தின் கூட்டு நடவடிக்கையின் பிரகாரம் அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சிறப்பு விசாரணை அலுவலகம், பாதுகாப்புப் படையினரின் சட்டவிரோதச் செயல்களை ஆராய்ந்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் உயரிய ராணுவ விருது பெற்ற படை அதிகாரியாக Ben Roberts-Smith திகழ்கின்றார்.

மேற்படி காலப்பகுதியில் ஆஸ்திரேலிய படைகளும் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்தமை தெரிந்ததே.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!