செய்தி

தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் – சிவகங்கை மாவட்டத்திற்கு விஜய் நாளை விஜயம்

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்வதால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மின்மாற்றி, மின்கம்பங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் பிரபுவிற்கு ஆதரவாக நாளை (10.04) அக்கட்சியின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சி அலுவலகம், கண்ணதாசன் மணிமண்டபம் பகுதியில் தேவர் சிலை நான்கு ரோடு சந்திப்பு
பகுதியில் தவெகவினர் அனுமதி கோரியிருந்தனர்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள பகுதிகளில் பொலிஸார் ஆய்வு செய்தனர்.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் தேவகோட்டை கோட்டாச்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில் இன்று அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் பிரச்சாரம் செய்ய உள்ள தேவர் சிலை பகுதியில் உள்ள மின்மாற்றி, மின் கம்பங்கள், திறந்த வெளி சாக்கடை கால்வாய் அடைக்கப்பட்டுள்ளதாக
தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!