டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (09) நாணய மாற்று விகிதத்திற்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 69 சதமாகவும், விற்பனை பெறுமதி 301 ரூபா 12 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 59 சதமாகவும், விற்பனை பெறுமதி 379 ரூபா 16 சதமாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309 ரூபா 68 சதமாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதி 326 ரூபா 14 சதமாக பதிவாகியுள்ளது.
(Visited 8 times, 1 visits today)