நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம் – இந்தியாவில் ஏற்பட்ட அதிர்வு – 32 பேர் மரணம்
நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் பின்னர் 06 பின் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார், அசாம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த அதிர்ச்சி உணரப்பட்டது.
இந்த அதிர்ச்சியால் அந்த பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர்.
நேபாளம் புவியியல் ரீதியாக செயல்படும் பகுதியில் அமைந்துள்ளது.
இதன்படி, இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மோதுவதால், தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
(Visited 3 times, 1 visits today)