Pragueவின் மத்திய ஓக்லஹோமாவில் நிலநடுக்கம் பதிவு!
மத்திய ஓக்லஹோமாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் படி, ப்ராக் நகருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் (4.9 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாக நிறுவனம் கூறியது.
ப்ராக் நகரம் ஓக்லஹோமா நகரத்திலிருந்து கிழக்கே சுமார் 57 மைல்கள் (92 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது, அங்கு குடியிருப்பாளர்கள் நிலநடுக்கத்தின் அதிர்ச்சியை உணர்ந்ததாக தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை. ஜனவரி மாதம் ஓக்லஹோமாவில் தொடர்ச்சியான பூகம்பங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)