தேவிஸ்ரீ பிரசாத்துடன் ஜோடிசேர தயாரான கீர்த்தி சுரேஷ்

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் “எல்லம்மா” படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், இதுவரை தில் ராஜுவோ அல்லது படக்குழுவோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
சமீபத்திய டாலிவுட் தகவல்களின்படி, இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளது.
தில் ராஜுவும், இயக்குனர் வேணுவும் விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். இது தேவிஸ்ரீ பிரசாத்தின் முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
எல்லம்மா படத்தில் கீர்த்தி சுரேஷ், தேவிஸ்ரீ பிரசாத் ஜோடி சேர்ந்தால், அது ரசிகர்களுக்கு ஒரு புதிய காம்போவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
(Visited 5 times, 1 visits today)