இங்கிலாந்தின் பாதுகாப்பு திறன் தொடர்பில் சந்தேகம் – கவலையில் ஜான் ஸ்வினி!
ஸ்காட்லாந்து கடற்கரைக்கு அப்பால் ரஷ்ய இராணுவத்தால் ஏற்படும் “அச்சுறுத்தலை” சமாளிக்கும் திறன் இங்கிலாந்துக்கு இல்லாமல் இருக்கலாம் என்று ஜான் ஸ்வினி (John Swinney) கூறியுள்ளார்.
வட அட்லாண்டிக்கில் உள்ள முக்கியமான கடலடி கேபிள்களுக்கு மேல் ஒரு ரஷ்ய தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலும் இரண்டு உளவு நீர்மூழ்கிக் கப்பல்களும் சுற்றித் திரிவது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் பாாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கவலைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொஸ்கோவிலிருந்து வரக்கூடிய எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தல்களையும் சமாளிக்க இங்கிலாந்தின் ஆயுதப் படைகளின் திறன் குறித்தும் அவர் கவலைகளை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே வடக்கு ஸ்காட்லாந்து கடற்கரைக்கு அப்பால் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களை இங்கிலாந்து கண்காணித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





