செய்தி

இன்று ரயில் பயணம் வேண்டாம்: ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரான் மக்கள், இன்று இரவு 9 மணி வரை ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல ஈரான் அனுமதிக்கத் தவறினால், அந்நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் சாதகமான பிரதிபளிப்பை வெளியிடாவிட்டால் இதற்கான காலக்கெடு இன்று முடிந்த பின்னர், அமெரிக்கா உக்கிர தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் ஈரான், தெஹ்ரானில் உள்ள முக்கிய இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர் வான் வழி தாக்குதலை நடத்திவருகின்றது.

இவ்வாறான பதற்றமான சூழ்நிலையிலேயே ரயில் நிலையங்களுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இன்று ரயில் பயணத்தை தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!