UKவில் வாடகை துறையில் காணப்படும் பாகுபாடு : புறக்கணிக்கப்படும் இளைஞர்கள்!
பிரித்தானியாவில் தனியார் வாடகை துறையில் காணப்படும் நியாயமற்ற பாகுபாட்டின் காரணாக பெரும்பாலான இளைஞர்கள் வீடற்ற நிலைக்கு அல்லது பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகளுக்கு தள்ளப்படுவதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
வீடொன்றை வாடகைக்கு எடுக்க முடிந்தாலும் கூட குத்தகைதாரர்கள், வயது, தொழில், குடும்ப உத்தரவாததாரர் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அவர்களை நிராகரிப்பதாக EveryYouth கண்டறிந்துள்ளது.
வாடகைதாரர்களின் உரிமைகள் சட்டம் சில குழுக்களுக்கு பாகுபாட்டிற்கு எதிராக புதிய பாதுகாப்புகளை அறிமுகப்படுத்தும் என்றாலும், இளம் வாடகைதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இது போதுமான அளவு நிவர்த்தி செய்யாமல் போகலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவே வீட்டு உரிமையாளர்களுக்கான தண்டனைகள் உட்பட வயது பாகுபாட்டிற்கு எதிராக வலுவான பாதுகாப்புகளை செயல்படுத்த EveryYouth அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மேலும் வாடகைதாரர்களின் உரிமைகள் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை நீட்டிக்க “நடவடிக்கையை மதிப்பாய்வு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





