பிரேசிலில் பேரிடர் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
தென்கிழக்கு பிரேசிலில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 74 பேர் காயமடைந்துள்ளதாகவும், 67 பேர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக அப்பகுதியை பாதித்துள்ளதால் இந்த அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 70,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் குடிநீரின்றி தவிப்பதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 4 times, 1 visits today)