இலங்கை செய்தி

திருகோணமலையில் மதுபான சாலை அனுமதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திருகோணமலை- தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் தனியார் ஒருவரினால் மதுபானசாலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மதுபான சாலைக்கான அனுமதியை வழங்க வேண்டாமென தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தோப்பூர் -கூர்கண்டம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையை தொடர்ந்து சுலோகங்களை ஏந்தியவாறு நடைபவணியாக வந்து திருகோணமலை -மட்டக்களப்பு வீதியில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோப்பூர்-கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை அமையப் பெறுமாக இருந்தால் பல்வேறு சமூக சீர்கேடுகளும், பிரச்சினைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும்,அதனால் இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் – கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை திறப்பதனை தடுப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை