7 மாத குழந்தை உயிரிழப்பு: யாழில் சோகம்!
இருதயம் மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட கடுமையான நோய் பாதிப்பு காரணமாக ஏழு மாதப் பெண் குழந்தையொன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – நுணாவில் பகுதியைச் சேர்ந்த நிரூபன் ரெஸ்மிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்தக் குழந்தை பிறந்தது முதல் இருதய நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்துள்ளது.
இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. எனினும், மேலதிக சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் நேற்று அக்குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் மரணம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.





