ஒப்பந்தம் சாத்தியமில்லை- அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
அமெரிக்கா சர்வதேச சட்டங்களுக்கு இணங்க செயல்படாதவரை, அதனுடன் எந்த ஒப்பந்தமும் எட்டக்கூடிய நிலையில் இல்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் நடைபெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடலில், இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியதாக ஈரான் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த உரையாடல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.




