பிரித்தானிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் – பொது மக்களுக்கு எச்சரிக்கை
 
																																		பிரித்தானியாவில் நடந்த ஆராய்ச்சில் இறைச்சியை அதிகளவில் உண்பதால் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நிபுணர்கள் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இறைச்சி சாப்பிடும் போக்கை 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைக்க எச்சரிக்கை படங்கள் உதவக்கூடும் என்று Appetite சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
Durham பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 1,000 பேர் பங்கேற்றனர். இந்த ஆய்வில் இறைச்சி, மீன் மற்றும் சைவ உணவு வகைகளில் பல்வேறு எச்சரிக்கை படங்கள் பயன்படுத்தப்பட்டன.
சில படங்களில் ‘இதைச் சாப்பிடுவதால் உலகில் தொற்றுநோய் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது…’ மற்றும் ‘இதைச் சாப்பிடுவதால் பருவநிலை மாற்றத்துக்கான உங்கள் பங்கு அதிகரிக்கிறது…’ போன்ற படங்களுடன் அறிவுறுத்தல்கள் பயன்படுத்தப்பட்டன. எனினும், சில உணவுகளில் அவ்வாறு எதுவும் படங்கள் பதிக்கப்பவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
        



 
                         
                            
