விளையாட்டு

CWC – வங்காளதேசத்தை எளிதாக வீழ்த்திய பாகிஸ்தான்

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதிய இந்த போட்டியில் வங்காளதேசம் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய தன்சித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல், டக் அவுட் ஆகி வெளியேறினார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் 4 ரன்களிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

வங்காளதேசம் அணி 45.1 ஓவர்களில் 204 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, அப்துல்லா ஷபீக் மற்றும் பஹார் ஜமான் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.

அப்துல்லா ஷபீக் சிறப்பாக விளையாடி 68 ரன்களை குவித்தார். பஹார் ஜமான் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களுக்கு நடையை கட்டினார்.

அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களையும், இஃப்திகார் அகமது 17 ரன்களையும் அடித்தனர்.

போட்டி முடிவில் பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content