இலங்கை செய்தி

555 பயணிகளுடன் சுற்றுலாக் கப்பல் திருகோணமலை துறைமுகம் வருகை!

555 சுற்றுலாப் பயணிகளுடன் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, “M.V.Crystal Symphony” எனும் கப்பல் இன்று (23) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.

ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இக்கப்பல் மூலம் திருகோணமலையை வந்தடைந்தனர்.

அவர்கள் திருகோணமலை, சீகிரியா, ஹபரணை போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பஹாமாஸ் நாட்டில் The Bahamas பதிவு செய்யப்பட்டுள்ள இக்கப்பலில் 497 பணியாளர்கள் வருகை தந்துள்ளதுடன் இவர்கள் திருகோணமலையில் ஒரு நாள் சுற்றுப்பயணத்தில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மையமான திருகோணமலைக்கு இச்சுற்றுலாப் பயணிகளின் வருகை, கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறைக்கு பெரும் பக்கபலமாக இருக்கும் என சுற்றுலாத் துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!