கோவிட் காலக் கல்வி விவகாரம் – இங்கிலாந்தில் 36 பல்கலைக்கழகங்களுக்கு எதிராக மாணவர்கள் சட்ட நடவடிக்கை
கொவிட் தொற்றுநோய் காலத்தில் முழுமையான கல்வி சேவையை பெறவில்லை என குற்றம் சுமத்தி, இங்கிலாந்தில் மேலும் 36 பல்கலைக்கழகங்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டு வருகின்றன.
1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமான தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்கள், தாங்கள் செலுத்திய முழுக் கல்விக் கட்டணத்திற்கு இணையான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்று தெரிவித்து இழப்பீடு கோரத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவுக்கு இடையே தீர்வொன்று எட்டப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, மேலும் 36 பல்கலைக்கழகங்களுக்கு சட்டப்பூர்வ எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், கல்விக் கட்டணங்களை நிர்ணயிப்பது பல்கலைக்கழகங்களின் பொறுப்பு என்றும், அவர்கள் தொடர்ந்து உயர்தரக் கல்வி வழங்க வேண்டும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.





