இந்தியா செய்தி

இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை – டெல்லியை விட்டு வெளியேறும் வெளியேறும் மக்கள்

ஈரான் – அமெரிக்க, இஸ்​ரேல் போர் காரண​மாக இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் கப்​பல்​கள் வரு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநி​யோகத்​தி​லும் பிரச்​சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளி​மாநிலங்​களில் இருந்து டெல்​லிக்கு வந்து குடியேறி​யுள்ள பலருக்கு சிலிண்​டர்​கள் கிடைக்காமையால்
அதிக விலை கொடுத்​தும் வாங்க முடியாத நிலை​யில் பலர் சொந்த கிராமங்​களுக்கு செல்கின்றனர்.

பழைய டெல்லி ரயில் நிலை​யத்​தில் சான்​ஜுக்டா என்ற பெண் தனது குடும்​பத்​தா​ருடன் டெல்​லியை விட்டு தனது சொந்த கிராமத்​துக்​குச்
செல்​வ​தாகத் தெரிவித்​தார்.

அந்த பெண் மேலும் தெரிவிக்கையில்,

“டெல்​லி​யின் நங்​லோய் பகு​தி​யில் வசித்து வரு​கிறோம். தற்​போது வேலை​யும் இல்​லை. சமையல் காஸ் சிலிண்​டரும் கிடைப்​ப​தில்​லை. கிடைத்​தா​லும் அதிக விலைக்கு விற்​கப்​படு​கிறது. அதை வாங்க எங்​களால் முடிய​வில்​லை. நான் சமையல் வேலை செய்து வரு​கிறேன். எனது கணவரும் கூலி வேலைக்​குச் செல்​கிறார். எனக்கு தினந்​தோறும் ரூ.200 மட்​டுமே கிடைக்​கிறது.

சமையல் காஸ் சிலிண்​டர்(5 கிலோ) ரூ.600 க்கு விற்​பனை செய்கின்றனர். அதனை வாங்க முடிய​வில்​லை. அதனால் தற்​போது கிராமத்​துக்​குச் செல்​கிறோம்.
சமையல் காஸ் சிலிண்​டர் கிடைக்​காத​தால் டெல்​லி​யில் திரு​மணங்​கள் நடை​பெறு​வதும் குறைந்​துள்​ளது.
இதனால் சமையல் வேலை கிடைப்​ப​தில்​லை. நான் வேலை பார்த்து வந்த கம்​பெனியை​யும் மூடி​விட்​டனர்

எனவே, ஹரி​யா​னா​வின் போரியா மாவட்​டத்​தி​லுள்ள எனது சொந்த கிராமத்​துக்​குச் செல்​கிறேன். அங்கு எப்படியாவது சமாளித்துக் கொள்வேன்’’ என்​றார்.

டெல்லி மட்​டுமல்​லாமல் நாட்​டின் பல நகரங்​களி​லும் இதே நிலை​தான் நில​வு​கிறது என்று சுபாஷ் நகரைச் சேர்ந்த வினோத் குமார்​(38) தெரி​வித்​தார்.
அவர் மேலும் கூறும்​போது,

“நான் கூலி வேலைக்​குச் செல்​கிறேன். தினந்​தோறும் 400 ரூபா கிடைக்​கும்.

ஆனால் இப்​போது வேலை கிடைப்​ப​தில்​லை. எனவே, பிஹாரில் உள்ள தர்​பாங்கா​வுக்​குச் செல்​கிறேன். இந்​தப் பிரச்​சினைக்கு மத்​திய அரசு தீர்வு காணவேண்​டும். சமையல் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்டை நீக்​கவேண்​டும். காஸ் சிலிண்​டர் கிடைக்​காத​தால் எனது மனைவி மண்​ணெண்​ணெய் அடுப்பில் சமைக்​கிறார்.

இதனால் வீட்டில் புகை சூழ்ந்​து​கொள்​கி​கிறது. எனக்கு இரு​மல் பிரச்​சினை ஏற்​படு​கிறது. வீட்டு உரிமை​யாளர் இதற்கு ஆட்​சேபம் தெரிவிக்​கிறார்’’ என்றார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!