தொகுதி பங்கீடு: பேச்சு நடத்த விசேட குழு அமைத்தது தி.மு.க.!
தேர்தல் கூட்டணி அமைக்கும் நகர்வை வெற்றிகரமாக நகர்த்தி வரும் தி.மு.க., அடுத்தக்கட்டமாக தொகுதி பங்கீடு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு நடத்த எழுவர் அடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவின் தலைமைப் பதவி டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துபை; பொதுச்செயலாளர் திருச்சி சிவா, ஆ.இராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ. வேலு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏனைய குழு உறுப்பினர்களாவர்.





